தாய் உடல் எரிக்கப்பட்ட இடத்திற்கு தினமும் செல்லும் குட்டி யானை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே தாயை இழந்த குட்டி யானை அதன் நினைவாக தாய் உடலை எரித்த இடத்திற்கு தினமும் வந்து செல்கிறது.அங்கு மலைவாழ் மக்களின் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்ட 301 காலனியில் விளை நிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆக., 12 இரவு 45 வயதுடைய பெண் காட்டு யானை மின்சாரம் தாக்கி இறந்தது. அதற்கு 2
 தாய் உடல் எரிக்கப்பட்ட இடத்திற்கு தினமும் செல்லும் குட்டி யானை

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே தாயை இழந்த குட்டி யானை அதன் நினைவாக தாய் உடலை எரித்த இடத்திற்கு தினமும் வந்து செல்கிறது.

அங்கு மலைவாழ் மக்களின் மறுவாழ்வுக்காக உருவாக்கப்பட்ட 301 காலனியில் விளை நிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆக., 12 இரவு 45 வயதுடைய பெண் காட்டு யானை மின்சாரம் தாக்கி இறந்தது.

அதற்கு 2 வயதுடைய குட்டி உள்ளது. அந்த கூட்டத்தைச் சேர்ந்த ஆறு யானைகளும் உள்ளன. பகலில் ஆனயிரங்கல் அணை கரையோரம் தீவனத்தை தேடும் யானைகள் இரவில் இறந்த யானை உடல் எரிக்கப்பட்ட இடத்தில் முகாமிட்டு வருகின்றன. முதலில் குட்டி யானை தாய் உடல்எரிக்கப்பட்ட இடத்திற்கு புறப்பட்டவுடன் மற்ற யானைகளும் பின் தொடர்கின்றன.

ஆறு வயது வரை குட்டிகள் தாயிடம் பால் குடிக்கும் வழக்கம் உள்ளதால் தாயை இழந்த குட்டி யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூட்டத்துடன் யானை குட்டி உள்ளதால் அது தானாக இரை தேடப் பழகிக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X