பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் விபரம்; இணை இயக்குனர் விசாரணை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சிவகங்கை : அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா என இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) அமுதவள்ளி விசாரணை செய்தார்.கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது இதன் தாக்கம் குறைந்துள்ளதால் செப்.1 முதல் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பு துவக்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில்

சிவகங்கை : அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா என இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) அமுதவள்ளி விசாரணை செய்தார்.

கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது இதன் தாக்கம் குறைந்துள்ளதால் செப்.1 முதல் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே வகுப்பு துவக்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் மாணவர்களை கொரோனா விதிகளுக்கு உட்பட்டு எப்படி கையாள்வது என்பது குறித்து இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) அமுதவள்ளி விசாரணை மேற்கொண்டார்.

அரசு பள்ளி வளாகங்கள் சுகாதாரமாக உள்ளதா, பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா என்பது போன்ற விபரங்களை சேகரித்தார். மேலும் ஆன்லைன் வகுப்பு எந்தளவிற்கு சென்று கொண்டிருக்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். சிவகங்கை சி.இ.ஓ., எஸ்.மணிவண்ணன்,நேர்முக உதவியாளர் முனியாண்டி ஆகியோர் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X