மூல பரம்பொருளுக்கு தெரியாதா? அர்ச்சகர்கள் குடும்பம் கண்ணீர்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மூல பரம்பொருளுக்கு தெரியாதா? அர்ச்சகர்கள் குடும்பம் கண்ணீர்!

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (41)
Share
திருப்பூர்:''முதல்வருக்கு தெரிவது, மூலப் பரம்பொருளுக்கு தெரியாதா? தமிழக அரசு முடிவால், நுாற்றுக்கணக்கான அர்ச்சகர் குடும்பங்கள் கண்ணீர் வடிக்கின்றன,'' என, கூனம்பட்டி நடராஜ சுவாமிகள் கூறினார்.திருப்பூர் அருகேயுள்ள, கூனம்பட்டி குருகுலம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் நடராஜ சுவாமிகள் கூறியதாவது:தர்மம், பக்தி, புண்ணியம், ஆன்மிகத்துக்கு இடமில்லாமல் போய் விட்டது.
 மூல பரம்பொருளுக்கு தெரியாதா? அர்ச்சகர்கள் குடும்பம் கண்ணீர்!

திருப்பூர்:''முதல்வருக்கு தெரிவது, மூலப் பரம்பொருளுக்கு தெரியாதா? தமிழக அரசு முடிவால், நுாற்றுக்கணக்கான அர்ச்சகர் குடும்பங்கள் கண்ணீர் வடிக்கின்றன,'' என, கூனம்பட்டி நடராஜ சுவாமிகள் கூறினார்.

திருப்பூர் அருகேயுள்ள, கூனம்பட்டி குருகுலம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் நடராஜ சுவாமிகள் கூறியதாவது:தர்மம், பக்தி, புண்ணியம், ஆன்மிகத்துக்கு இடமில்லாமல் போய் விட்டது. தர்மம், புண்ணியம் செய்தோர் கீழ் நிலையிலும், பாவம், அதர்மம் செய்வோர் மேல்நிலையிலும் இருப்பது தான் கலிகாலம்.

முதல்வருக்கு, அவர் வீட்டில் இருந்தாலும், நாட்டில் என்ன நடக்கிறது என்பது நொடிப் பொழுதில் தெரியும் போது, உலகையே ஆட்சி செய்யும் மூலப் பரம்பொருளுக்கு தெரியாமல் போய்விடுமா?'அண்ணலார் அருவமேனி' என துவங்கும் அவிநாசி புராணத்தில், சிவலிங்க திருமேனியை தொட்டு பூஜிக்க ஆதிசைவர்களான சிவாச்சாரியார்களுக்கே உரிமை உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆகமம் பயின்று விட்டால் மட்டுமே சிவாச்சாரியார் ஆகி விட முடியாது.ஒருவர் ஒரு தொழிலை தெரிந்து கொண்டார் என்பதற்காக, அந்த சமுதாயத்தவராக மாறி விட முடியாது. அப்படியிருக்கும்போது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது என்ன நியதி? எல்லோராலும் அதைப் பின்பற்ற முடியாது.

தமிழக அரசின் இந்த முடிவால், பல நுாற்றுக்கணக்கான அர்ச்சகர் குடும்பங்கள் கண்ணீர் வடிக்கின்றன. முப்போதும் திருமேனி தீண்டும் சிவாச்சாரிய பெருமக்கள் இதை எண்ணி வேதனைப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X