பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்வதில் எடையளவு சரியாக உள்ளதா. கொள்முதல் ரகங்கள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் பட்டுவாடா எவ்வாறு செய்யப்படுகிறது என அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து, கொள்முதல்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த காணை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்வதில் எடையளவு சரியாக உள்ளதா. கொள்முதல் ரகங்கள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் பட்டுவாடா எவ்வாறு செய்யப்படுகிறது என அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கொள்முதல் செய்த நெல்லுக்கு தேவையான இடவசதி, மின்சார வசதி, நெல் மூட்டைகளை மழையில் நனைந்து விடாதபடி பாதுகாக்க தார்பாய் வசதி குறித்தும், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனே ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் முறையில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஷீனா, தாசில்தார் வெங்கடசுப்ரமணியன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X