பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா சாகுபடிக்கு ஆயத்தமாகும் டெல்டா: நிலுவை நீரை பெற்று தருமா தமிழக அரசு?

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மேட்டூர்:டெல்டாவில் சம்பா சாகுபடிக்கு ஆயத்தமான நிலையில், மேட்டூர் அணை நீர் இருப்பு சரிந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் நிலுவை நீரை பெற, கர்நாடகாவுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. 93.47 டி.எம்.சி., நீர்த்தேக்க முடியும். ஆண்டுதோறும் ஜூன் 12ல் திறக்கும்
 சம்பா சாகுபடிக்கு ஆயத்தமாகும் டெல்டா: நிலுவை நீரை பெற்று தருமா தமிழக அரசு?

மேட்டூர்:டெல்டாவில் சம்பா சாகுபடிக்கு ஆயத்தமான நிலையில், மேட்டூர் அணை நீர் இருப்பு சரிந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் நிலுவை நீரை பெற, கர்நாடகாவுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. 93.47 டி.எம்.சி., நீர்த்தேக்க முடியும். ஆண்டுதோறும் ஜூன் 12ல் திறக்கும் நீர் மூலம், டெல்டா உட்பட 12 மாவட்டங்களில், 4 லட்சம் ஏக்கரில் குறுவை, 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படும்.ஜூன் 12ல் அணை நீர்மட்டம் 96.81 அடியாக இருந்த நிலையில், பாசனத்துக்கு நீர் திறந்ததால் டெல்டாவில் குறுவை சாகுபடி துவங்கியது.

கர்நாடகா, ஜூன் முதல் மே வரை 177.25 டி.எம்.சி., நீரை தமிழகத்துக்கு தர வேண்டும்.கடந்த மூன்று மாதங்களாக, நிர்ணயித்த நீரை விட குறைவாகவே விடுவித்துள்ளது. ஜூன் முதல் நேற்று வரை 63 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். 45 டி.எம்.சி., வழங்கிய நிலையில் 18 டி.எம்.சி., நிலுவை வைத்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு செப்டம்பர் இறுதி வரை, நீர் திறக்க வேண்டும். அடுத்த மாதம், விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை துவங்குவர் என்பதால், தொடர்ச்சியாக நீர் திறக்க வேண்டும். இந்நிலையில் நீர்வரத்து குறைந்ததால், நேற்று மேட்டூர் அணை நீர் இருப்பு 31.08 டி.எம்.சி.,யாக சரிந்தது.

தினமும், 1 டி.எம்.சி., பாசனத்துக்கு திறக்கப்படுகிறது. அதிகபட்சமாக 30 நாட்கள் திறக்க முடியும்.பாசனத்துக்கு நீர் திறக்க, கர்நாடகா உரிய நீரை வழங்க வேண்டும் அல்லது வடகிழக்கு பருவ மழை கைகொடுக்க வேண்டும். இல்லையேல், நடப்பாண்டு டெல்டாவில் சம்பா சாகுபடி பாதிக்கும்.

இதனால், அணை நீரை நம்பி சம்பா சாகுபடியை துவங்குவதா, வடகிழக்கு பருவ மழை கைகொடுக்குமா என்ற குழப்பம், டெல்டா விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. 'கர்நாடகா திறந்து விட வேண்டிய நிலுவை நீரை பெற, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்' என விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பாண்டியன்: குறுவை சாகுபடி, செப்டம்பர் இறுதியில் நிறைவடையும். அதே சமயம் சம்பா சாகுபடி ஆயத்த பணி துவங்கும். இதனால், செப்டம்பர் இறுதி வரை தேவையான நீரை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். அப்படி தண்ணீர் வழங்கப்படுமா என தெரியவில்லை.

கர்நாடகா ஜூலை, ஆகஸ்ட் நிலுவை நீரை வழங்க, ஏற்கனவே காவிரி மேலாண் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் பற்றாக்குறையால் சாகுபடி பாதிக்குமானால் தமிழக அரசே பொறுப்பு.த.மா.கா., விவசாய அணி மாநில பொதுச் செயலர் வரதராஜன்: டெல்டா சாகுபடிக்கு ஆகஸ்ட், செப்டம்பரில் அதிக தண்ணீர் தேவைப்படும். பின் அப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடையும் என்பதால், நீர் தேவை குறைந்துவிடும்.

இரு மாத தண்ணீரை, கர்நாடகாவில் நிலுவையின்றி முழுமையாக பெற்றுத்தரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. அந்த தண்ணீர் கிடைத்தாலே குறுவை, சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும். நிலுவை நீரை பெற, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆகஸ்ட் மாத நீர்வரத்தே சம்பா சாகுபடியை நிர்ணயித்துள்ளது. 30 ஆண்டுகளில் ஆகஸ்ட் மாத நீர்வரத்தை கணக்கிடுகையில், 2012ல் 7.5 டி.எம்.சி., 2016ல் 14 டி.எம்.சி., என குறைவாகவே நீர் வந்துள்ளது. 2018 ஆகஸ்டில் மட்டும் 168 டி.எம்.சி., வந்துள்ளது.நடப்பாண்டு ஆகஸ்டில் நேற்று வரை 10 டி.எம்.சி., வந்துள்ளது. இன்னும் 10 டி.எம்.சி., கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் செப்டம்பர் இறுதி வரை நீர் திறக்கலாம். பின் பருவ மழை கைகொடுத்தால், சம்பா சாகுபடியை நிறைவு செய்ய முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X