வானூர் தொகுதியில் டைடல் பார்க்... இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வானூர் தொகுதியில் டைடல் பார்க்... இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு

Added : ஆக 19, 2021
Share
வானுார்: வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் டைடல் பார்க் அமைய உள்ளதால், படித்த இளைஞர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் படித்த இளைஞர்களின் நலன் கருதி அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் சென்னையில் உள்ள டைடல் பார்க் போன்று, விழுப்புரம், வேலுார், துாத்துக்குடி, திருப்பத்துார் மாவட்டங்களிலும் டைடல் பார்க்

வானுார்: வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் டைடல் பார்க் அமைய உள்ளதால், படித்த இளைஞர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் படித்த இளைஞர்களின் நலன் கருதி அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் சென்னையில் உள்ள டைடல் பார்க் போன்று, விழுப்புரம், வேலுார், துாத்துக்குடி, திருப்பத்துார் மாவட்டங்களிலும் டைடல் பார்க் அமைக்கப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் அறிவித்தார்.

இதில் விழுப்புரம் மாவட்டத்தில் வானுார் தொகுதியில் அமைந்துள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. தற்போது அமைய உள்ள டைடல் பார்க் மூலம் வானுார் மட்டுமின்றி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த அறிவிப்பு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.குறிப்பாக டைடல் பார்க் அமைவதன் மூலம் வர்த்தகம், மென்பொருள் ஏற்றுமதி, கட்டுமானம், வேலைவாய்ப்பு என பல பிரிவுகளில் வளர்ச்சி அடையும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.வானுார் பகுதியைச் சுற்றியுள்ள இளைஞர்கள் வேலைக்காக, புதுச்சேரி மற்றும் சேதராப்பட்டு பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளை நம்பியுள்ளனர்.

மேலும், பலர் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.தற்போது டைடல் பார்க் அறிவிக்கப்பட்டுள்ளதால், வானுார் மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து வானுார் பகுதியில் உள்ள இளைஞர்கள் கூறுகையில், ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்வதற்கு சென்னை, பெங்களூரு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் தங்கி வேலை செய்யும் நிலையும் இருக்கிறது.

தற்போது வானுார் பகுதியில் அமைய உள்ள டைடல் பார்க் மூலம், இப்பகுதி வளர்ச்சியடையும். மேலும், எங்களைப் போன்ற படித்த இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.இடம் தயார்வானுார் தொகுதியில் மயிலம் ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு எதிரிலேயே 5 ஏக்கர் இடத்தில் அமைக்க மாவட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சட்டசபையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே மாவட்ட அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து விட்டனர்.அந்த இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை என தாசில்தார் சங்கரலிங்கம் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X