பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டாவில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில், 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளதால், உரமிடுதல், களை எடுத்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர்
 டெல்டாவில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்:டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களில், 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளதால், உரமிடுதல், களை எடுத்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுஉள்ளதால், முறை பாசனம் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

இதனால், ஒரு சில இடங்களில் பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என, விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம், நன்னிலத்தில் 7.6 செ.மீ., மயிலாடுதுறையில் 6.4, மஞ்சலாறு பகுதியில் 6.3, தஞ்சாவூரில் 5.7, மணல்மேடு பகுதியில் 4.2, நாகுடியில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது.

இதனால், குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முளைத்த நெல் மணிகள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஏரகரம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், போதிய இடவசதி இல்லாததால், விவசாயிகள் கொண்டு வந்த நெல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இதனால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளன. நெல் மணிகளை காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X