பொது செய்தி

தமிழ்நாடு

நான் தான் அடுத்த மதுரை ஆதீனம் நித்யானந்தாவின் 'காமெடி கதகளி'

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இறந்த நிலையில், 'அடுத்த ஆதீனம் நான் தான்' என தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார் நித்யானந்தா. பக்தர்களுக்கு 'ஆன்லைன்' மூலம் ஆசீர்வாதம் வழங்கப் போவதாக, முகநுாலில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மதுரை ஆதீனத்தின் 292வது பீடாபதிபதியாக இருந்த அருணகிரிநாதர், 77 உடல்நிலை பாதித்து ஆக., 12ல் காலமானார். அதற்கு முன்னதாகவே அறிக்கை வெளியிட்டிருந்த

மதுரை:மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இறந்த நிலையில், 'அடுத்த ஆதீனம் நான் தான்' என தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார் நித்யானந்தா.

பக்தர்களுக்கு 'ஆன்லைன்' மூலம் ஆசீர்வாதம் வழங்கப் போவதாக, முகநுாலில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மதுரை ஆதீனத்தின் 292வது பீடாபதிபதியாக இருந்த அருணகிரிநாதர், 77 உடல்நிலை பாதித்து ஆக., 12ல் காலமானார். அதற்கு முன்னதாகவே அறிக்கை வெளியிட்டிருந்த நித்யானந்தா, 2012ல், தான் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்தது குறித்து குறிப்பிட்டிருந்தார்.

இந்நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தாவை மதுரை ஆதீனம் நீக்கினார். இவ்விவகாரம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 2019ல் சுந்தரமூர்த்தி என்பவரை இளைய ஆதீனமாக அறிவித்து, அவருக்கு ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் என அருணகிரிநாதர் பெயர் சூட்டினார். இவர் முறைப்படி, வரும் 23ம் தேதி மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், '293வது பீடாதிபதியாக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இனி, என் பெயர் பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். ஆன்லைனில் ஆசீர்வாதம் வழங்கப்படும். 'இறந்த ஆதீனத்தின் பெயரில் பல்கலை அமைக்கப்படும்' என, முகநுாலில் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீன மடத்தில் கேட்டபோது, 'ஆதீன மடத்திற்கும், நித்யானந்தாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் மீது பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வழக்குகள் உள்ளன. அதில் இருந்து தப்பிக்கவே ஏதோ ஒரு இடத்தில் இருந்தபடி, காமெடி செய்து கொண்டிருக்கிறார். 'பிற ஆதீனங்களின் ஆதரவோடு, இளைய ஆதீனம் 293வது பீடாதிபதியாக பொறுப்பேற்பார்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X