டி.இ.எல்.சி., தேவாலயத்தில் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டி.இ.எல்.சி., தேவாலயத்தில்

Added : ஆக 19, 2021
Share
விழுப்புரம்: காவணிபாக்கம் கிராமசபை டி.இ.எல்.சி., தேவாலயத்தில் திருநிலைப்படுத்துதல் விழா கொண்டாடப்பட்டது.திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்படுகிறது. இந்த திருச்சபை மூலம் பல தேவாலயம், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகள் அமைந்துள்ளன.விழுப்புரம் அடுத்த காவணிபாக்கம் கிராமசபை டி.இ.எல்.சி., தேவாலயத்தை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை
 டி.இ.எல்.சி., தேவாலயத்தில்

விழுப்புரம்: காவணிபாக்கம் கிராமசபை டி.இ.எல்.சி., தேவாலயத்தில் திருநிலைப்படுத்துதல் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்படுகிறது. இந்த திருச்சபை மூலம் பல தேவாலயம், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகள் அமைந்துள்ளன.விழுப்புரம் அடுத்த காவணிபாக்கம் கிராமசபை டி.இ.எல்.சி., தேவாலயத்தை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் டேனியல் ஜெயராஜ், பிரதிஷ்டை செய்தார்.

பொருளாளர் ஆண்ட்ரூஸ் ரூபன், ஜோசப் கல்லுாரி மற்றும் மகதலேனா பெண்கள் மேல்நிலை பள்ளி தாளாளர் பிரபாகர் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர்.மறைமாவட்ட தலைவர் கிடியோன் ஜெபக்குமார், ஜான்சன், உறுப்பினர்கள் கென்னடி, பிரேம்சிங் சுகுமாரன், தேவநேசன், கனகராஜ், எலியாஸ் ஜெயகாந்தன், ஜார்ஜ் செல்வகுமார், ஜெயா, சத்தியாவதி, கமலாஜோசப், ராஜமுத்து, ஜான்சுந்தர்ராஜ், அருள் பெஞ்சமின் உட்பட ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கச் செயலாளர் ஜெயசீலன் செய்திருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X