சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு: ஏ.பி.டி.ஓ., கைது

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியை, போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முருகானந்த வள்ளி, 48; கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்த விஜயகுமார், 58, தற்போது, திருவோணம் யூனியனில், துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக உள்ளார்.முருகானந்த வள்ளியின்

தஞ்சாவூர்:பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி மிரட்டிய, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முருகானந்த வள்ளி, 48; கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்த விஜயகுமார், 58, தற்போது, திருவோணம் யூனியனில், துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக உள்ளார்.முருகானந்த வள்ளியின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்ததை, விஜயகுமாருக்கு சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விஜயகுமார், இது பற்றி முருகானந்த வள்ளியிடம் கேட்டுள்ளார்.அதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, விஜயகுமார் ஆபாசமாக திட்டியுள்ளார். முருகானந்த வள்ளிக்கும், வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக, முருகானந்த வள்ளியின் மகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளார்.

இது பற்றி கேட்ட போது, விஜயகுமார் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். முருகானந்த வள்ளி புகார்படி, தஞ்சை மருத்துவக் கல்லுாரி போலீசார், விஜயகுமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X