சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சி.எஸ்.ஐ., தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
துாத்துக்குடி:துாத்துக்குடி சி.எஸ்.ஐ., திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அகரம்பஞ்சாயத்து தலைவர் பொன்சீலன், 45. அ.தி.மு.க., பிரமுகர். முன்விரோதங்களால், துாத்துக்குடி முத்தையாபுரத்தில் வசித்து வந்தார். இவர், தற்போது நடக்கும் துாத்துக்குடி - நாசரேத் சி.எஸ்.ஐ., திருமண்டலத் தேர்தலில்
 சி.எஸ்.ஐ., தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை

துாத்துக்குடி:துாத்துக்குடி சி.எஸ்.ஐ., திருமண்டல தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அகரம்பஞ்சாயத்து தலைவர் பொன்சீலன், 45. அ.தி.மு.க., பிரமுகர். முன்விரோதங்களால், துாத்துக்குடி முத்தையாபுரத்தில் வசித்து வந்தார். இவர், தற்போது நடக்கும் துாத்துக்குடி - நாசரேத் சி.எஸ்.ஐ., திருமண்டலத் தேர்தலில் போட்டியிட்டு, பெருமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

அகரத்தில் நடந்த கோவில் கொடை விழாவை ஒட்டி, பஞ்சாயத்து துணைத் தலைவர் தவசிக்கனி வீட்டில் சாப்பிட நேற்று அங்கு சென்றிருந்தார். அப்போது, அவரது வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நான்கு பேர் கும்பல், பொன்சீலனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, தப்பியது.


பின்னணி என்ன?@


@



ஏரலில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவது தொடர்பாக, பொன்சீலனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த லெனின் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 2017 அக்., 23ல் லெனின் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில், பொன்சீலன் மீது வழக்கு உள்ளது. அதன்பின் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் லெனின் மனைவியை எதிர்த்து, பொன்சீலன் வெற்றி பெற்றார். தற்போது, துாத்துக்குடி மாவட்டத்தில் சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ அமைப்பின் லே செயலர் தேர்தல் நடக்கிறது. அதில் முதற்கட்டமாக நடந்த பெருமன்ற தேர்தலில் பொன்சீலன் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெபஸ்டின் தோல்வி அடைந்தார்.எனவே, ஜெபஸ்டின்மற்றும் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட லெனினின் தம்பிகள் ரூபன், 48; ஜெகன், 42, மற்றும் ஜெபசிங் ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாக, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X