கிரைம் செய்திகள்...

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மூதாட்டியிடம் தகராறுதிண்டிவனம்: வைரபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி ராதா, 60; இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த 16ம் தேதி இரவு 10:00 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித்குமார், 21; மூடிய கடையை திறக்கும் படி கூறியுள்ளார்.ராதா மறுத்ததால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், ஆபாசமாக பேசி, கடையின் கதவு

மூதாட்டியிடம் தகராறு
திண்டிவனம்: வைரபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி ராதா, 60; இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த 16ம் தேதி இரவு 10:00 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித்குமார், 21; மூடிய கடையை திறக்கும் படி கூறியுள்ளார்.ராதா மறுத்ததால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், ஆபாசமாக பேசி, கடையின் கதவு மற்றும் கேட்டை உடைத்து ரகளை செய்துள்ளார்.

இதை தடுக்க வந்த ராதாவின் கணவரையும் தாக்கினார். புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை தேடி வருகின்றனர்.மது பாட்டில் விற்ற இருவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: டி.குமாரமங்கலம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த வைரம், 62; என்பவரை கைது செய்து, 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மழவராயநல்லுார் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் அய்யனார் கோவில் அருகே மது பாட்டில் விற்ற விழுப்புரம் மாரியப்பன், 40; என்பவரை கைது செய்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மகள் மாயம்: தாய் புகார்திண்டிவனம்: சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி கவுசல்யா, 44; இவரது மகள் கனிஷ்கா, 19; பிளஸ் 2 முடித்துள்ளார். தற்போது திண்டிவனம், ராஜம்பேட்டை வீதியில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை கடைக்குச் செல்வதாக கூறிச் சென்ற கனிஷ்கா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கவுசல்யா அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மகன் மாயம்: தந்தை புகார்விழுப்புரம்: வளவனுார் அடுத்த வி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் லெனின், 19; கடலுாரில் அரசு ஐ.டி.ஐ.,யில் இரண்டாம் ஆண்டு பயில்கிறார். இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X