தமிழ்நாடு

முல்லைப்பெரியாற்றில் மின் உற்பத்தி செய்ய... திட்டம்!

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கம்பம் : தேனிமாவட்டத்தில் முல்லைப்பெரியாற்றில் சிறிய அளவில் மின்உற்பத்திக்கான மைக்ரோ பவர் ஹவுஸ் ஏற்கெனவே 4 செயல்பாட்டில் உள்ள நிலையில் கூடுதலாக அமைக்கும் பணியை மேற்கொள்ள மின்வாரியம் முடிவு செய்துள்ளது.தேவைக்கேற்ப மின்உற்பத்தியை அதிகரிக்க பல வழிகளில் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் முல்லைப்பெரியாற்றில் லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை 28

கம்பம் : தேனிமாவட்டத்தில் முல்லைப்பெரியாற்றில் சிறிய அளவில் மின்உற்பத்திக்கான மைக்ரோ பவர் ஹவுஸ் ஏற்கெனவே 4 செயல்பாட்டில் உள்ள நிலையில் கூடுதலாக அமைக்கும் பணியை மேற்கொள்ள மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

தேவைக்கேற்ப மின்உற்பத்தியை அதிகரிக்க பல வழிகளில் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் முல்லைப்பெரியாற்றில் லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை 28 இடங்களில் மைக்ரோ பவர் ஹவுஸ் அமைக்கும் திட்டமாகும். இடத்திற்கு ஏற்ப 1.25 மெகாவாட் முதல் 5 மெகாவாட் வரை மின்உற்பத்தி செய்யலாம்.

2008 ல் முதன்முதலில் லோயர்கேம்ப் அருகே குருவனுாத்துபாலத்தில் 2 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் மைக்ரோ பவர் ஹவுஸ் அமைக்கப்பட்டது. தொடர்ந்து காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டியில் அமைக்கப்பட்டது. இரண்டு இடங்களில் 2 மெகாவாட், இரண்டு இடங்களில் 1.25 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. சுருளிப்பட்டி பூதிமேட்டுகளம், உத்தமபாளையம் முல்லையாற்று பாலம், வீரபாண்டி, சீலையம்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதற்கான முதலீடு, கிடைக்கும் மின்சாரம், உற்பத்தி செய்ய ஆகும் செலவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் லாபம் இல்லை என்பதால் கைவிடப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் மறுஆய்வுப்பணிகள் துவங்கி வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் மைக்ரோ பவர் ஹவுஸ் அமைக்க மின்வாரியம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X