பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தேக்கடி:பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1300 கனஅடியாக குறைக்கப்பட்டது.தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் 136 அடியை கடந்தது. அதன்பின் மழை குறைவால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் துவங்கியது. இந்நிலையில் 1800 கனஅடியாக இருந்த நீர் திறப்பு நேற்று காலை 10:00 மணியில் இருந்து

தேக்கடி:பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1300 கனஅடியாக குறைக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் 136 அடியை கடந்தது. அதன்பின் மழை குறைவால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் துவங்கியது. இந்நிலையில் 1800 கனஅடியாக இருந்த நீர் திறப்பு நேற்று காலை 10:00 மணியில் இருந்து வினாடிக்கு 1300 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 133.55 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர்வரத்து 583 கனஅடியாகும். நீர் இருப்பு 5528 மில்லியன் கனஅடியாகும். பெரியாறில் மட்டும் 2.4 மி.மீ., மழை பதிவானது.குறைந்தது மின் உற்பத்தி தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள நீரின் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் தலா 39 மெகாவாட் வீதம் 3 ஜெனரேட்டர்களில் 117 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு முன் 4 ஜெனரேட்டர்களில் 162 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X