பொது செய்தி

தமிழ்நாடு

கட்டாய கல்வி உரிமை சட்டம் குலுக்கல் முறையில் இன்று தேர்வு; 2980 பேர் விண்ணப்பம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தேனி : கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளில் சேர விண்ணப்பித்தோருக்கு இன்று குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது.குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எல்.கே.ஜி., நுழைவு நிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள்

தேனி : கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளில் சேர விண்ணப்பித்தோருக்கு இன்று குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது.

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எல்.கே.ஜி., நுழைவு நிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.தேனி மாவட்டத்தில் 124 பள்ளிகளில் ஆயிரத்து 631 இடங்களுக்கு 2 ஆயிரத்து 980 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆக. 13 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

மாணவர் சேர்க்கைக்காக இன்று அந்தந்த பள்ளிகளில் காலை 10:00 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் இது நடைபெறும். பெற்றோர் மட்டும் கலந்து கொள்ளலாம்.இப்பணியினை வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X