வேப்ப முத்துக்கள் விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேப்ப முத்துக்கள் விலை உயர்வு

Added : ஆக 19, 2021
Share
ஆண்டிபட்டி : விளைச்சல் குறைவால் ஆண்டிபட்டி பகுதியில் வேப்ப முத்துக்கள் விலை உயர்ந்துள்ளது.இப்பகுதியில் மானாவாரி நிலங்கள், மலைசார்ந்த பகுதிகள், புறம்போக்கு நிலங்கள், குடியிருப்பு, அரசு அலுவலக வளாகங்களில் வேப்ப மரங்கள் அதிகம் உள்ளன. ஜூனில் துவங்கி ஆகஸ்ட் முடிய மரங்கள் காய்ப்புக்கான காலமாகும். மரத்தில் பூ, இலை, காய், கொட்டை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.வேப்ப

ஆண்டிபட்டி : விளைச்சல் குறைவால் ஆண்டிபட்டி பகுதியில் வேப்ப முத்துக்கள் விலை உயர்ந்துள்ளது.


இப்பகுதியில் மானாவாரி நிலங்கள், மலைசார்ந்த பகுதிகள், புறம்போக்கு நிலங்கள், குடியிருப்பு, அரசு அலுவலக வளாகங்களில் வேப்ப மரங்கள் அதிகம் உள்ளன. ஜூனில் துவங்கி ஆகஸ்ட் முடிய மரங்கள் காய்ப்புக்கான காலமாகும். மரத்தில் பூ, இலை, காய், கொட்டை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.வேப்ப முத்துக்களில் இருந்து வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டிபட்டி பகுதியில் பல டன் அளவிலான வேப்ப முத்துக்கள் சேகரிக்கப்படுகிறது. கிராமங்களில் இதனை பகுதி நேர தொழிலாக செய்கின்றனர்.

வியாபாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஆண்டிபட்டி பகுதியில் தினமும் 10 டன் அளவிலான வேப்ப முத்துக்கள் கிடைக்கும். இந்த ஆண்டு காய்ப்பு குறைவால் தினமும் 3 டன் அளவில் வரத்து உள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ.40 ஆக இருந்த வேப்ப முத்து தற்போது கிராக்கியால் கிலோ ரூ.75 ஆக உயர்ந்துள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X