பொது செய்தி

தமிழ்நாடு

நெல் பயிர் பாதுகாப்பு முறைகள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கூடலுார் : நெல்லில் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து கம்பம் வேளாண் உதவி இயக்குனர் சின்னக்கண்ணு ஆலோசனை வழங்கியுள்ளார்.அவர் கூறியதாவது:கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது நெல் பயிர்கள் தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. இந்த நேரத்தில் பயிரில் இலைப்பேன், தத்துப்பூச்சி, சுருட்டுப் புழுக்கள் ஆகியவை தாக்கும். இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் ஒளிச்சேர்க்கை

கூடலுார் : நெல்லில் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து கம்பம் வேளாண் உதவி இயக்குனர் சின்னக்கண்ணு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவர் கூறியதாவது:கம்பம் பள்ளத்தாக்கில் தற்போது நெல் பயிர்கள் தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. இந்த நேரத்தில் பயிரில் இலைப்பேன், தத்துப்பூச்சி, சுருட்டுப் புழுக்கள் ஆகியவை தாக்கும். இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு இலைகள் காய்ந்த நிலையில் காணப்படும்.

இதனால் மகசூல் குறையும்.இதனை கட்டுப்படுத்த வயல்வெளிகளை சுத்தமாக பராமரித்து வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். விளக்குப் பொறிகள், இனக்கவர்ச்சிப் பொறிகள் பயன்படுத்தி தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

பூச்சிகளின் தாக்குதலை கண்காணித்து பொருளாதார சேத நிலைக்கு அதிகமாக இருந்தால் தேவைப்பட்டால் ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X