பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் சேர தபால் அலுவலகங்களில் இன்று சிறப்பு முகாம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தேனி : ரூ. 2 லட்சத்திற்கான ' பிரதான்மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா' காப்பீட்டு திட்டத்தில் சேர தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.இக் காப்பீட்டு திட்டத்தில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ. 330 பிரீமிய தொகை செலுத்தினால் ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். இவர்களுக்கு 55 வயது வரை ஆயுள்

தேனி : ரூ. 2 லட்சத்திற்கான ' பிரதான்மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா' காப்பீட்டு திட்டத்தில் சேர தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.

இக் காப்பீட்டு திட்டத்தில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ. 330 பிரீமிய தொகை செலுத்தினால் ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். இவர்களுக்கு 55 வயது வரை ஆயுள் பாதுகாப்பு கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் மே 31 வரை இக்காப்பீடு அமலில் இருக்கும்.

ஆண்டு தோறும் ரூ. 330 பிரீமியம் செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம். ஆதார், அலைபேசி, உரிய காப்பீட்டு தொகையுடன் தபால் அலுவலகங்களுக்கு சென்றால் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ்சில் வங்கி கணக்கு துவக்கி காப்பீட்டு திட்டத்தில் சேரலாம் என தபால் துறை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X