இயற்கை விவசாயம் செய்ய விருப்பமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை விவசாயம் செய்ய விருப்பமா

Added : ஆக 19, 2021
Share
திண்டுக்கல் : 'இயற்கை விவசாயம் செய்ய விரும்புவோர் அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்கலாம்' என, திண்டுக்கல் விதைச்சான்று உதவி இயக்குனர் வரதராஜன் கூறினார்.அவர் கூறியது: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அங்ககச்சான்று பெற்ற விளை பொருட்களுக்கு மதிப்பு கூடியுள்ளது. இயற்கை விவசாயம் செய்ய நிலத்தில் எரு, பசுந்தாள் உரம், மண்புழு உரம், பஞ்சகாவ்யா, இயற்கை பூச்சி

திண்டுக்கல் : 'இயற்கை விவசாயம் செய்ய விரும்புவோர் அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்கலாம்' என, திண்டுக்கல் விதைச்சான்று உதவி இயக்குனர் வரதராஜன் கூறினார்.

அவர் கூறியது: மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அங்ககச்சான்று பெற்ற விளை பொருட்களுக்கு மதிப்பு கூடியுள்ளது. இயற்கை விவசாயம் செய்ய நிலத்தில் எரு, பசுந்தாள் உரம், மண்புழு உரம், பஞ்சகாவ்யா, இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம். இதனால் செலவு குறைதல், மண்வளம் பெருகுதல், சுற்றுச்சூழல் மேம்பாடு, நச்சுத் தன்மையற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற பல நன்மைகள் உள்ளன.

கால்நடை, தேனீ வளர்ப்பு, வனப்பொருட்கள் சேகரிப்பு செய்வோர்களும் அங்ககச் சான்று பெறலாம்.அங்ககச் சான்று பெற தனிநபராகவோ, 25 முதல் 500 நபர்கள் கொண்ட குழுவாகவோ பதிவு செய்யலாம். பண்ணையின் பொது விபரக்குறிப்பு, வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விபரம், பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், நிரந்தர கணக்கு எண் அட்டை, ஆதார் நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பதிவுக் கட்டணம் ரசீதுடன் விண்ணப்பிக்கலாம்.

பதிவு, ஆய்வு, சான்று மற்றும் பயண நேர கட்டணமாக சிறு, குறு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.2,700, மற்ற விவசாயிகள் ரூ.3,200 செலுத்த வேண்டும். குழுவாக பதிவு செய்ய ரூ.7,200, வணிக நிறுவனங்கள் ரூ.9,400 செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94438 32741, 86105 67565 ல் பேசலாம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X