கொடைக்கானலில் சுகாதாரமற்ற உணவு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் உணவகங்களில் வழங்கப்படும் சுகாதாரமற்ற உணவால் பயணிகள் ஒவ்வாமையால் அவதியுறுகின்றனர்.சுற்றுலாத்தலமான கொடைக்கானல் விடுதிகளில் உணவுகளில் கலப்படம், தடை செய்த அஜினோமோட்டோ, சுவை அதிகரிக்கும் மெருகூட்டி, நிறமி கலவை உணவில் சேர்க்கப்படுவது,பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி உணவுகள் தயார் செய்வதாக புகார்எழுந்தது.ஊரடங்கிற்கு பின்

கொடைக்கானல் : கொடைக்கானல் உணவகங்களில் வழங்கப்படும் சுகாதாரமற்ற உணவால் பயணிகள் ஒவ்வாமையால் அவதியுறுகின்றனர்.

சுற்றுலாத்தலமான கொடைக்கானல் விடுதிகளில் உணவுகளில் கலப்படம், தடை செய்த அஜினோமோட்டோ, சுவை அதிகரிக்கும் மெருகூட்டி, நிறமி கலவை உணவில் சேர்க்கப்படுவது,பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி உணவுகள் தயார் செய்வதாக புகார்எழுந்தது.ஊரடங்கிற்கு பின் உணவகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியும், சுகாதாரமற்ற உணவு சப்ளை செய்யப்படுகிறது.

இவற்றை உண்போர் ஒவ்வாமை, வயிற்றுக் கோளாறு, வாந்தி, பேதியால் அவதியுறுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லாரன்ஸ்: கொடைக்கானல் உணவகங்களில் ஆய்வு நடந்து வருகிறது. வரும் நாட்களில் அனைத்து உணவகங்களுக்கும் சுகாதாரமான உணவு சப்ளை செய்ய வலியுறுத்தி சுற்றறிக்கை அனுப்பப்படும். விலைப் பட்டியலும் வைக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை பாயும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X