74வது நாளாக குறையாத மஞ்சளாறு அணை நீர்மட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

74வது நாளாக குறையாத மஞ்சளாறு அணை நீர்மட்டம்

Added : ஆக 19, 2021
Share
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையில் ஊற்றினால் நீர் மட்டம் நேற்று 74 வது நாளாக ஒரே அளவாக 55 அடியாக இருந்தது.மஞ்சளாறு அணை மொத்த உயரம் 57 அடி. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் மழையால் அணைக்கு நீர் வரத்து இருக்கும். ஜூன்4ல் 55 அடியாக உயர்ந்தது. அணையில் 55 அடி மட்டும் நீர் தேக்க முடியும். கூடுதலாக வந்த தண்ணீர் 14 நாட்கள் உபரி

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையில் ஊற்றினால் நீர் மட்டம் நேற்று 74 வது நாளாக ஒரே அளவாக 55 அடியாக இருந்தது.
மஞ்சளாறு அணை மொத்த உயரம் 57 அடி. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் மழையால் அணைக்கு நீர் வரத்து இருக்கும். ஜூன்4ல் 55 அடியாக உயர்ந்தது. அணையில் 55 அடி மட்டும் நீர் தேக்க முடியும். கூடுதலாக வந்த தண்ணீர் 14 நாட்கள் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.13 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தொடர்ந்து நேற்று 74 வது நாளாக நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து இல்லை.

செப்டம்பர் அல்லது அக்டோரில் பாசனத்திற்கு திறப்பதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.இந்த அணை நீரால் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் 2111 ஏக்கர் என மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன பயன்பெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X