பொது செய்தி

தமிழ்நாடு

ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதில் இழுபறி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தேனி : உத்தமபாளையம், ஆண்டிபட்டியில் இடம் வழங்காததால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தேனி, கம்பம், சின்னமனுார், போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் உள்ளன. உத்தமபாளையத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சிறிய தனியார் கட்டடத்திலும், ஆண்டிபட்டிக்கான விற்பனை கூடம் தங்கமாள்புரத்திலும்

தேனி : உத்தமபாளையம், ஆண்டிபட்டியில் இடம் வழங்காததால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தேனி, கம்பம், சின்னமனுார், போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் உள்ளன. உத்தமபாளையத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சிறிய தனியார் கட்டடத்திலும், ஆண்டிபட்டிக்கான விற்பனை கூடம் தங்கமாள்புரத்திலும் உள்ளன. உத்தமபாளையம் தாலுகாவில் ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறும்.

இங்கு போதிய கோடவுன்கள், உலர் களம் இல்லை. ஆண்டிபட்டி விவசாயிகளுக்கும் இதே நிலைமை. இதனால் பாதிக்கின்றனர்.ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை இடம் தேவை. மாவட்ட நிர்வாகம் இடம் வழங்கினால் கோடவுன்கள், உலர்களம், குளிர்பதன கிடங்கு வசதிகள் கிடைக்கும். உத்தமபாளையத்திற்கான கோடவுன் கோம்பையிலும், ஆண்டிபட்டி பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். ஆனால் வருவாய் துறையினர் ஏனோ ஆர்வம் காட்டவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X