கிடப்பில் குடிநீர் திட்டம்| Dinamalar

கிடப்பில் குடிநீர் திட்டம்

Added : ஆக 19, 2021
Share
வடமதுரை : அய்யலுார் அருகே கெண்டமுத்துநாயக்கனுாரில் குடிநீர் திட்டம் கிடப்பில் உள்ளது.இங்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அல்லது ஊராட்சியின் உள்ளூர் நீராதாரங்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்படாமல் தொட்டியை வெறுமனே கிடப்பில் விட்டுவிட்டனர்.குடிநீர் பிரச்னையை தீர்க்க

வடமதுரை : அய்யலுார் அருகே கெண்டமுத்துநாயக்கனுாரில் குடிநீர் திட்டம் கிடப்பில் உள்ளது.

இங்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அல்லது ஊராட்சியின் உள்ளூர் நீராதாரங்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்படாமல் தொட்டியை வெறுமனே கிடப்பில் விட்டுவிட்டனர்.

குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி கிராமத்தில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த ராமசாமி கூறுகையில், ''இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு நீரேற்ற முயற்சி நடந்தது. மின்மோட்டாருக்கு போதிய திறன் இல்லாததால் நீர் தொட்டியின் உயரத்திற்கு ஏற்ற முடியவில்லை. இதனால் தொட்டி பயன்பாட்டின்றியே உள்ளது' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X