பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் உதவித்தொகை; கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தேனி : முதியோர் உதவித் தொகை வங்கி மூலம் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிக தொடர்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.தேனி மாவட்டத்தில் உள்ள வங்கி வணிக தொடர்பாளர்கள் சரவணன், ரகுநாத் தலைமையில் 50 பேர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் வங்கி சேவை மையங்கள் மூலம் அரசு முதியோர் உதவி தொகை ரூ.1000 மாதந்தோறும் உரியவர்களுக்கு வீடுதேடி சென்று வழங்கி

தேனி : முதியோர் உதவித் தொகை வங்கி மூலம் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிக தொடர்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள வங்கி வணிக தொடர்பாளர்கள் சரவணன், ரகுநாத் தலைமையில் 50 பேர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் வங்கி சேவை மையங்கள் மூலம் அரசு முதியோர் உதவி தொகை ரூ.1000 மாதந்தோறும் உரியவர்களுக்கு வீடுதேடி சென்று வழங்கி வருகிறோம்.பயோ மெட்ரிக் முறையில் முறைகேடு இன்றி வழங்கப்பட்டு வருகிறது. உதவி பெறுவோர் இறந்தால் உடனே இறப்பு பற்றி தாலுகா அலுவலகத்திற்கு தகவல் அளிக்கிறோம்.

இந்நிலையில் முதியோர் உதவி தொகை வழங்கும் பணியை தபால் துறையினர் இந்தியன் போஸ்ட் வங்கி மூலம் வழங்க உள்ளதாக தெரிகிறது. இதனால் 150 வணிக தொடர்பாளர்கள் பாதிக்கப்படுவோம். இச்ேசைவை நாங்கள் தொடர அனுமதிக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X