பொது செய்தி

தமிழ்நாடு

மதிப்பெண் சான்று வழங்குவதில் இழுத்தடிப்பு புகார் செய்ய வழியின்றி மாணவர்கள் தவிப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி(டி.டி.இ.,)சார்பில் மதிப்பெண் மற்றும்தற்காலிக சான்று (புரொவிஷனல் சர்ட்டிபிகேட்) வழங்குவது இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.டி.டி.இ., மூலம் ஏப்., 2020 தேர்வுகள் ஆன்லைன் மூலம் டிசம்பரில் நடந்தன. 30 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் இளங்கலை பாடங்களுக்கு ஜூன் 17 ம், முதுகலை பாடங்களுக்கு ஜூன் 22 ம் வெளியிடப்பட்டன. ஆனால்

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி(டி.டி.இ.,)சார்பில் மதிப்பெண் மற்றும்தற்காலிக சான்று (புரொவிஷனல் சர்ட்டிபிகேட்) வழங்குவது இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

டி.டி.இ., மூலம் ஏப்., 2020 தேர்வுகள் ஆன்லைன் மூலம் டிசம்பரில் நடந்தன. 30 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் இளங்கலை பாடங்களுக்கு ஜூன் 17 ம், முதுகலை பாடங்களுக்கு ஜூன் 22 ம் வெளியிடப்பட்டன. ஆனால் தேர்ச்சி பெற்ற பெரும்பாலான மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் மற்றும் தற்காலிக சான்றிதழ்கள் அனுப்பிவைக்கப் படவில்லை.

மாணவர்கள் கூறியதாவது: பல்கலையில் நவ., 2019 தேர்வு எழுதிய பலருக்கும் இன்னும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. டி.டி.இ., அலுவலகம் சென்று சான்றிதழ் தொடர்பான சந்தேகம் கேட்டால் பதில் அளிப்பதில்லை. புகார் அளிக்க இயக்குனர் அலுவலகம் சென்றாலும் இதே நிலைதான் உள்ளது. பிற பல்கலைகளை ஒப்பிடுகையில் பணம் செலுத்திவிட்டு சான்றிதழ் பெறுவதில் இங்கு பாடதபாடு படவேண்டியுள்ளது என்றனர்.

தொடரும் குழப்பம்:

இப்பல்கலையில் இரண்டு வாரங்களுக்கு மேல் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. அவர் இல்லாத நிலையில் பல்கலையை வழிநடத்தும் கன்வீனர் குழுவும் அமைக்கப்பட வில்லை. தற்போது உயர் பதவிகளில் இருப்பவர்கள் 'கூடுதல் பொறுப்பு' வகிக்கின்றனர். மதிப்பெண் சான்று இழுத்தடிப்பு போன்ற பிரச்னைகளை யாரிடம் சொல்வது என தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X