அரசின் மவுனத்தால் திவால் நிலையை நோக்கி கூட்டுறவு சொசைட்டி, வங்கிகள்: நகைக்கடன் கொடுக்க முடியலை; கடனை வாங்க முடியலை| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அரசின் மவுனத்தால் திவால் நிலையை நோக்கி கூட்டுறவு சொசைட்டி, வங்கிகள்: நகைக்கடன் கொடுக்க முடியலை; கடனை வாங்க முடியலை

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (8)
Share
மதுரை:தமிழக அரசின் மவுனத்தால் கூட்டுறவு சொசைட்டி, வங்கிகளில் 40 கிராமிற்கு மேல் நகைக்கடன் வைத்திருப்பவர்களும்தள்ளுபடி கிடைக்கும் என அசல், வட்டி கட்டாமல் உள்ளனர். வருவாய் இழப்பால் புதிதாக நகைக்கடன் வழங்க முடியாமல்கூட்டுறவு வங்கிகள் தடுமாறுகின்றன.எட்டு மாதங்களாக கூட்டுறவு சொசைட்டிகள்,வங்கிகள் ஸ்தம்பித்து போயுள்ளன. பெரும்பாலான சொசைட்டிகளில் ஊழியர்களுக்கு
அரசின் மவுனத்தால் திவால் நிலையை நோக்கி கூட்டுறவு சொசைட்டி, வங்கிகள்: நகைக்கடன் கொடுக்க முடியலை; கடனை வாங்க முடியலை

மதுரை:தமிழக அரசின் மவுனத்தால் கூட்டுறவு சொசைட்டி, வங்கிகளில் 40 கிராமிற்கு மேல் நகைக்கடன் வைத்திருப்பவர்களும்தள்ளுபடி கிடைக்கும் என அசல், வட்டி கட்டாமல் உள்ளனர். வருவாய் இழப்பால் புதிதாக நகைக்கடன் வழங்க முடியாமல்கூட்டுறவு வங்கிகள் தடுமாறுகின்றன.

எட்டு மாதங்களாக கூட்டுறவு சொசைட்டிகள்,வங்கிகள் ஸ்தம்பித்து போயுள்ளன. பெரும்பாலான சொசைட்டிகளில் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதே பெரிய பிரச்னையாக உள்ளது. நகைகளுக்குபொதுமக்கள் வட்டி கட்டவே இல்லை. அப்போைதய முதல்வர் பழனிசாமி ஆறு பவுன் நகைகள் வரை வட்டி தள்ளுபடி என்றார்.

இப்போது 5 பவுன் அதாவது 40 கிராம் அளவு, அதற்கு கீழே நகைக்கடன் வைத்து இருப்பவர்களுக்கு தள்ளுபடி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நகைக்கடன் குறித்த ஏலநடவடிக்கை எடுக்கக்கூடாது என சொசைட்டி, வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 18 மாதங்களாக மக்கள் நகைகளை திருப்பவில்லை. அசல் மற்றும் வட்டியும் கட்டவில்லை. அவற்றை ஏலத்திற்கு விடமுடியாமல் சொசைட்டி, வங்கிகள் பரிதவிக்கின்றன.

ஒருபுறம் சொசைட்டி, வங்கிகள் பணப்பற்றாக்குறையால் பரிதவிக்கிறது என்றால் மற்றொரு பக்கம்சொற்ப நகைகளை அடகு வைக்க முடியாமல் தனியார் வட்டிக் கடைகளில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்குகின்றனர் சாமானியர்கள். தேசிய வங்கிகளில் ஒரு பவுனுக்கு குறைவான நகைகளை அடகு வைப்பது சிரமம்.

சொசைட்டி, கூட்டுறவு வங்கிகள் நகைக்கடன் தராததால் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். வருமான வரி கட்டுபவர்கள், கார் வைத்துஇருப்பவர்கள், கூட்டுறவு ஊழியர்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை. ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றுள்ள விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என தற்போது அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரே நபர் இரண்டு அல்லது மூன்று சொசைட்டிகளில் கடன் வைத்திருந்தால் இரண்டு, மூன்று தள்ளுபடி சென்று விடும். அதையும் சரிபார்ப்பதற்காக நகைக்கடன் வாங்கியவர்களின் ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு வாங்கி இணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருநபர் இரண்டு இடங்களில் கடன் வாங்கியிருந்தால் ஆதார் எண் மூலம் தெரிந்து விடும்.

இத்துடன் 40 கிராமிற்கு மேல் நகைக்கடன் வைத்துஇருப்பவர்களுக்கு தள்ளுபடி கிடையாது எனவும்தெளிவுபடுத்தப்பட்டுஉள்ளது.ஆனால் 40 கிராமிற்கு மேல் நகைக்கடன் வைத்திருப்பவர்களும் அரசு தங்களுக்கு தள்ளுபடி வழங்கும் என அலட்சியமாக உள்ளனர். ஏற்கனவே அடகு வைத்த நகைகளை பணம் செலுத்தி மக்கள் மீட்கவும் தயாராக இல்லை.

ஏற்கனவே நகைக்கடன் ஓராண்டு முடிந்த நிலையில் கூடுதலாக ஆறு மாதங்களாக நகைகளை திருப்பாமல் உள்ளனர். இதே போன்ற சூழ்நிலை 2010ல் வந்து நிறைய சொசைட்டி, சங்கங்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. அதுபோன்ற சூழ்நிலைக்கு மீண்டும் சொசைட்டி, வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களிடம் டெபாசிட் வாங்கி அந்த தொகை நகைக்கடனாக தரப்படுகிறது. அரசின் மவுனத்தால் நகைக்கடன் வட்டி கட்ட யாரும் தயாராக இல்லை. வருவாய் இல்லாததால் டெபாசிட்தாரர்களுக்கு முதிர்வுத் தொகை கொடுப்பதும் சிக்கலாக உள்ளது.எனவே அரசு நகைக்கடன் குறித்த தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும். அதன்மூலம் 40 கிராமிற்கு மேற்பட்ட நகைகளை வைத்திருப்பவர்கள் பணம் செலுத்தி நகைகளை மீட்க முன்வருவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X