தமிழ்நாடு

கோடநாடு வழக்கில் சயான் கூறியது என்ன? ஆக.,27ல் கோர்ட்டில் விசாரணை அறிக்கை

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஊட்டி: கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம், நேற்று முன்தினம் போலீசார் நடத்திய விசாரணை அறிக்கை ஆக., 27ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன.எஸ்டேட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலால், காவலாளி ஓம்பகதுார் கொலை
கோடநாடு வழக்கு, சயான், விசாரணை அறிக்கை

ஊட்டி: கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம், நேற்று முன்தினம் போலீசார் நடத்திய விசாரணை அறிக்கை ஆக., 27ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன.எஸ்டேட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலால், காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். ஆவணங்கள், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. வழக்கில், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதில், சயான், வாளையார் மனோஜ், நிபந்தனை ஜாமினில் உள்ளனர். மற்ற எட்டு பேர் ஜாமினில் உள்ளனர். கடந்த 13ம் தேதி இந்த வழக்கு, நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடந்தது. அடுத்த விசாரணை, 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


latest tamil news


இதற்கிடையே, நேற்று முன்தினம் ஊட்டியில் சயானிடம், நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் தலைமையில், மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணை முழுதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கில், 41 சாட்சிகளிடம் விசாரணை முடித்து, வழக்கு இறுதி கட்டதை எட்டியுள்ளது. தற்போது ஆட்சி மாற்றத்தால், போலீசார் திடீரென மறுவிசாரணை கோரினர். சயானும் சில முக்கிய தகவல்களை அளித்து உள்ளார்.

அதில், கோடநாடு பங்களாவில் உள்ள அறைகள், ஜன்னல்கள், செல்லும் வழி என, அனைத்து தகவல்களையும் அறிந்த, ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் குறித்தும் கூறியுள்ளார். மேலும், பொருட்களை கொள்ளையடித்த பின், இரு பிரிவாக பிரித்து, ஒன்று சமவெளி பகுதிக்கும் மற்றொன்று கேரளாவுக்கும் கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டது குறித்தும், தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை அதிகாரி வேல்முருகனிடம் கேட்டபோது, ''நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை வரும், 27ம் தேதிக்கு வருவதால், அப்போது தான் இந்த வழக்கு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை தெரிய வரும்,'' என்றார்.அன்று சயானிடம் நடத்திய விசாரணை குறித்த முழு விபரம், நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.


நேபாள நபரை அழைக்க திட்டம்


கடந்த, 2017 ஏப்., 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் கொலை செய்யப்பட்டார். அதே இடத்தில் இருந்த, நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ண பகதுார் என்பவர் காயத்துடன் உயிர் தப்பினார்.அப்பகுதியில், இருந்த ஒரே நபர் பகதுார் மட்டுமே. இதனால், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக அவர் இருந்தார். நான்கு ஆண்டுகளாக வழக்கு நடந்து வரும் நிலையில், சாட்சியம் பதிவு செய்யப்பட்ட பின், அவர் நேபாளம் சென்று விட்டார். தற்போது, இந்த வழக்கில் மறு விசாரணை துவக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கிருஷ்ண பகதுாரை அழைத்து வர வாய்ப்புள்ளதாக,போலீசார் தெரிவித்தனர்.


மீண்டும் சூடு பிடிக்கும் டிரைவர் வழக்கு


சேலம் மாவட்டம், இடைப்பாடி, சமுத்திரம் காட்டுவளவைச் சேர்ந்தவர் கனகராஜ், 36. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலாவிடம் கார் டிரைவராக பணிபுரிந்த இவர், 2017 ஏப்., 28 அதிகாலை, 2:00 மணிக்கு ஆத்துார் புறவழிச்சாலையில், பைக்கில் சென்றபோது கார் மோதி உயிரிழந்தார்.

'இறந்து, 20 மணி நேரத்துக்கு பின் பிரேத சோதனை செய்ததால், விபத்தில் இறந்தாரா, திட்டமிட்டு நடந்த விபத்தா என்று தெரியவில்லை' என,கனகராஜ் குடும்பத்தினர் புகார் கூறினர். கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டவர் கனகராஜ் என்பதால், அந்த சம்பவத்தில் அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் சிலருக்கு தொடர்புள்ளதாக, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், கனகராஜ், விபத்தில் இறந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஆக-202112:33:29 IST Report Abuse
தமிழவேல் யாரிடம் கோரினார்கள் ? // தற்போது ஆட்சி மாற்றத்தால், போலீசார் திடீரென மறுவிசாரணை கோரினர். //
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
19-ஆக-202110:54:04 IST Report Abuse
Believe in one and only God கொலை செய்தவர்கள் தப்பவே முடியாது
Rate this:
Cancel
jysen - Madurai,இந்தியா
19-ஆக-202109:31:09 IST Report Abuse
jysen Koda nadu is nothing but the treasure safe of jayalalitha. It is very much similar to the treasure cave of Ali baba and 40 Thieves.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X