கொரோனா தடுப்பூசி முறையாக போடவில்லை:பா.ஜ., மருத்துவரணி குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முறையாக போடவில்லை:பா.ஜ., மருத்துவரணி குற்றச்சாட்டு

Added : ஆக 19, 2021
Share
மதுரை:''மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கும் நிலையில் தென்மாவட்டங்களில் அவை முறையாக மக்களுக்கு செலுத்தப்படவில்லை,'' என மதுரையில் பா.ஜ., மருத்துவரணி மாநில தலைவர் விஜய பாண்டியன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது: பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் நாட்டில் இதுவரை 55 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் இது மிகப்பெரும் சாதனை.

மதுரை:''மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கும் நிலையில் தென்மாவட்டங்களில் அவை முறையாக மக்களுக்கு செலுத்தப்படவில்லை,'' என மதுரையில் பா.ஜ., மருத்துவரணி மாநில தலைவர் விஜய பாண்டியன் குற்றம் சாட்டினார்.

அவர் கூறியதாவது: பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் நாட்டில் இதுவரை 55 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் இது மிகப்பெரும் சாதனை. மாநிலங்கள் கேட்கும் தடுப்பூசிகளை மத்திய அரசு விநியோகித்து வருகிறது.தமிழகத்தில் இதுவரை பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி வழங்கப்பட்டு 2.50 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மாநில பொது சுகாதாரத்துறையும் தினமும் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரசு மருத்துவ மனை களில் தடுப்பூசி செலுத்த ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆன்லைன் மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தாலும் மூன்றாவது அலை அச்சத்தால் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்த முன் வருகின்றனர்.

மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான தடுப்பூசியை பெற்று தட்டுப்பாடின்றி முறையாக செலுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X