கலந்து ஆலோசிப்பதில்லை; கணவர்கள் தலையீடு!கஞ்சனூர் ஊராட்சியில் மாறி, மாறி புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலந்து ஆலோசிப்பதில்லை; கணவர்கள் தலையீடு!கஞ்சனூர் ஊராட்சியில் மாறி, மாறி புகார்

Added : ஆக 19, 2021
Share
அன்னுார்-கஞ்சப்பள்ளி ஊராட்சியில், தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு, முறைகேட்டில் ஈடுபடுவதாக, வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.உறுப்பினர்களுக்குப் பதில், அவர்களின் கணவர்கள் நிர்வாகத்தில் தலையிடுவதாக, ஊராட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.கஞ்சப்பள்ளி ஊராட்சி துணைத்தலைவர் வசந்த் மற்றும் ஆறு வார்டு உறுப்பினர்கள், நேற்று முன்தினம் கோவை கலெக்டர்

அன்னுார்-கஞ்சப்பள்ளி ஊராட்சியில், தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு, முறைகேட்டில் ஈடுபடுவதாக, வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உறுப்பினர்களுக்குப் பதில், அவர்களின் கணவர்கள் நிர்வாகத்தில் தலையிடுவதாக, ஊராட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.கஞ்சப்பள்ளி ஊராட்சி துணைத்தலைவர் வசந்த் மற்றும் ஆறு வார்டு உறுப்பினர்கள், நேற்று முன்தினம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேரிலும், முதல்வரின் தனிப் பிரிவுக்கும் அளித்துள்ள புகார் மனு:எங்கள் ஊராட்சியில், கடந்த ஓராண்டாக வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெறவில்லை.கடந்த 13ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், 73 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.பல தீர்மானங்களில் முரண்பாடுகள் இருந்ததால், ஏழு வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.கூட்டம் நிராகரிக்கப்பட்டது என, மினிட் புத்தகத்தில் பதிவு செய்து, நகல் கேட்டோம்.நகலைத் தர மறுத்துவிட்டனர்.ஆலோசிப்பதில்லைஊராட்சி சார்பில், தரமில்லாத பொருட்கள் வாங்கப்படுகின்றன. சரியான ஆவணங்களுடன், ரசீதில் உள்ள பணத்தை மட்டும் செலுத்துவோம் என கூறும் மக்களை, வாரக்கணக்கில் அலைக்கழிக்கின்றனர்.மன்ற தீர்மானத்தை கொண்டு வருவதற்கு முன், வார்டு உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பது இல்லை. தலைவர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்.எனவே, மாவட்டஅதிகாரிகள், ஊராட்சியில் நேரடியாக கள ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணவர்கள் தலையீடுஇதுகுறித்து, கஞ்சப்பள்ளி ஊராட்சி தலைவர் சித்ரா கூறியதாவது:ஊராட்சியில் ஒன்பதுவார்டு உறுப்பினர்கள்உள்ளனர். இதில், இரண்டு வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில்பங்கேற்றனர்.மீதியுள்ள ஏழு வார்டு உறுப்பினர்களில், உதவித்தலைவரைத் தவிர மற்ற ஆறு பேரில், நான்கு பெண் உறுப்பினர்களுக்கு பதில், அவர்கள் கணவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.வார்டு உறுப்பினர்களுக்குப் பதில், கணவர்கள் பங்கேற்றதால், கூட்டத்தை நடத்த முடியாது என, தெரிவித்துவிட்டோம்.எப்போது பெண் வார்டு உறுப்பினரைத் தொடர்பு கொண்டாலும், அவருடைய கணவரே பேசுகிறார்; ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடுகிறார்.பெண் வார்டு உறுப்பினருடன் கலந்தாலோசிக்க முடிவதில்லை. ஊராட்சி சார்பில் தரமான பொருட்களே கொள்முதல் செய்யப்படுகின்றன. யாரையும் அலைக்கழிப்பதில்லை.இவ்வாறு, அவர்தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X