கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்: முப்பெரும் விழாவில் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்: முப்பெரும் விழாவில் வலியுறுத்தல்

Added : ஆக 19, 2021
Share
மேட்டுப்பாளையம்-மேட்டுப்பாளையத்தில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் முப்பெரும் விழா நடந்தது.விவசாயிகள் சங்க, முன்னாள் தலைவர் பழனிசாமியின், 79வது பிறந்தநாள் விழா, சுதந்திர போராட்ட தியாகி சுந்தராம்பாளின், 14ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் கொடியேற்று விழா என, முப்பெரும் விழாவாக நடந்த நிகழ்ச்சிக்கு, விவசாயிகள் சங்க நகர தலைவர்,

மேட்டுப்பாளையம்-மேட்டுப்பாளையத்தில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் முப்பெரும் விழா நடந்தது.விவசாயிகள் சங்க, முன்னாள் தலைவர் பழனிசாமியின், 79வது பிறந்தநாள் விழா, சுதந்திர போராட்ட தியாகி சுந்தராம்பாளின், 14ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் கொடியேற்று விழா என, முப்பெரும் விழாவாக நடந்த நிகழ்ச்சிக்கு, விவசாயிகள் சங்க நகர தலைவர், பொன்னப்பன், தலைமை வகித்தார்.கூட்டத்தில், தேசிய வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்கள் அனைத்தையும், தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு அனுமதி இருப்பது போல, கள் மீதான தடையை, தமிழக அரசு நீக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை அமைக்க, நிலம் கையகப்படுத்தியும், சாலை அமைக்காமல் உள்ளது. எனவே, உடனடியாக சாலை அமைக்க வேண்டும். அன்னுார் விவசாயி மீது போடப்பட்ட வழக்குகளை, வாபஸ் பெற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விழாவில், மாநிலத் தலைவர் சண்முகம், பொதுச் செயலாளர் வேணுகோபால், அவைத் தலைவர் பாலசுப்ரமணியம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X