பொது செய்தி

இந்தியா

டெங்கு கொசு ஒழிப்பு பணி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி: நலவழித்துறை நகர்ப்புற சுகாதார நல வழி மையம் மற்றும் உழவர்கரை நகராட்சி சார்பில், தீவிர டெங்கு ஒழிப்பு முகாம் நடந்தது.லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் நடந்த முகாமை, உதவி இயக்குனர் (மலேரியா) கணேசன் துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகர்ப்புற சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி சுனிதா முன்னிலை வகித்தார். தலைமை செவிலியர்
 டெங்கு கொசு ஒழிப்பு பணி

புதுச்சேரி: நலவழித்துறை நகர்ப்புற சுகாதார நல வழி மையம் மற்றும் உழவர்கரை நகராட்சி சார்பில், தீவிர டெங்கு ஒழிப்பு முகாம் நடந்தது.லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் நடந்த முகாமை, உதவி இயக்குனர் (மலேரியா) கணேசன் துவக்கி வைத்தார்.

அதை தொடர்ந்து, டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகர்ப்புற சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி சுனிதா முன்னிலை வகித்தார். தலைமை செவிலியர் செல்வலட்சுமி, சுகாதார ஆய்வாளர் பழனிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வீடுகளை சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் இருந்த தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள், டயர், பானை போன்றவற்றை, வீட்டு உரிமையாளர் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

டெங்கு கொசு பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், டெங்கு நோயின் அறிகுறி பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.ஜிகா வைரஸ் சம்பந்தமாக பொது சுகாதார செவிலியர் கர்ப்பிணிகளுக்கு எடுத்துரைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X