தமிழ்நாடு

அச்சம் தவிர்! கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள...கர்ப்பிணி, பாலூட்டும் தாய்களுக்கு அறிவுரை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சூலுார்,--'தடுப்பூசி செலுத்திக்கொள்ள, இளம் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், அச்சம் கொள்ளத் தேவையில்லை' என, மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சூலுார் வட்டாரத்தில் உள்ள இருகூர், வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனுார் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் இளம் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணி, நேற்று முன்தினம்
 அச்சம் தவிர்! கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள...கர்ப்பிணி, பாலூட்டும் தாய்களுக்கு அறிவுரை

சூலுார்,--'தடுப்பூசி செலுத்திக்கொள்ள, இளம் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், அச்சம் கொள்ளத் தேவையில்லை' என, மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சூலுார் வட்டாரத்தில் உள்ள இருகூர், வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனுார் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் இளம் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் கீழ் உள்ள, கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள், இளம் தாய்மார்களுக்கு செவிலியர்கள் வாயிலாக தகவல் அளிக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதையடுத்து, அவர்கள், சுகாதார நிலையங்களுக்கு வந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.சோமனுாரில், 16 கர்ப்பிணிகள், 15 இளம் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதேபோல, வாகராயம்பாளையத்தில், 17 கர்ப்பிணிகள், 4 இளம் தாய்கள்; கருமத்தம்பட்டியில், 27 கர்ப்பிணிகள் மற்றும் 7 இளம்தாய்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.இருகூரில் 45 கர்ப்பிணி பெண்களுக்கும், 11 இளம் தாய்மார்களுக்கும், வட்டார மருத்துவ அலுவலர் உமர் பாரூக் தலைமையிலான மருத்துவ குழுவினர், தடுப்பூசி போட்டனர்.மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா, இருகூர் சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்தார்.

பின், கர்ப்பிணி பெண்களிடம் அவர் பேசியதாவது:வைரஸ் தொற்றில் இருந்து, நம் அனைவரையும் பாதுகாப்பது தடுப்பூசி மட்டுமே. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் இளம் தாய்மார்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்பட தேவையில்லை.இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். அதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட இளம் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுக்கலாம்.வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை அனைத்து இடங்களிலும் பின்பற்ற வேண்டும். விதிகளைக் கடைப்பிடித்தால், நோய்த் தொற்றில் இருந்து தப்பலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X