கடலில் மூழ்கிய சூடான் மாணவர்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்: கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட சூடான் நாட்டை சேர்ந்த மாணவரை, 18 நாட்கள் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.சூடான் நாட்டை சேர்ந்தவர் சலாகல்தீன், 25; இவர் பெங்களூருவில் தங்கி, பி.பி.ஏ., இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த 1ம் தேதி தனது நண்பர்களுடன் புதுச்சேரி வந்த. சலாகல்தீன், புதுக்குப்பம் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமானார். தவளக்குப்பம்

அரியாங்குப்பம்: கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட சூடான் நாட்டை சேர்ந்த மாணவரை, 18 நாட்கள் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சூடான் நாட்டை சேர்ந்தவர் சலாகல்தீன், 25; இவர் பெங்களூருவில் தங்கி, பி.பி.ஏ., இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த 1ம் தேதி தனது நண்பர்களுடன் புதுச்சேரி வந்த. சலாகல்தீன், புதுக்குப்பம் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமானார். தவளக்குப்பம் போலீசார், மீனவர்கள் உதவியுடன் தேடியும் கிடைக்கவில்லை. கடந்த 18 நாட்கள் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மாணவரின் பெற்றோர், துாதரகம் மூலம் முறையிட்டனர்.அதையடுத்து, புதுச்சேரி கடலோர காவல் படையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மாணவன் உடலை கல்பாக்கம் மற்றும் சென்னை கடலோர பகுதி வரை, ஹெலிகாப்டரில் சென்று தேடினர்.எந்த தகவலும் கிடைக்காததால், இந்திய கடலோர காவல் படையினருக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அதன்பேரில், தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதியில் போலீசார் தேடுதல் பணியை துவக்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X