குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்; குப்பை கிடங்கில் கலெக்டர் ஆய்வு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சூலுார்--சின்னியம்பாளையம் ஊராட்சியில் குப்பை கிடங்கில், கலெக்டர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.சூலுார் ஒன்றியத்துக்குட்பட்டது சின்னியம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, அவிநாசி ரோட்டை ஒட்டியுள்ள இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அருகில் நீர் வழிப்பாதையும் உள்ளது.கோவை விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள், இந்த வழியாக தாழ்வாக பறந்து,

சூலுார்--சின்னியம்பாளையம் ஊராட்சியில் குப்பை கிடங்கில், கலெக்டர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.

சூலுார் ஒன்றியத்துக்குட்பட்டது சின்னியம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, அவிநாசி ரோட்டை ஒட்டியுள்ள இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அருகில் நீர் வழிப்பாதையும் உள்ளது.கோவை விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள், இந்த வழியாக தாழ்வாக பறந்து, தரையிறக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த குப்பை கிடங்கு அருகில் கழுகு உள்ளிட்ட பறவைகள் பறப்பதால், விமானங்களை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்படுவதாக, விமான நிலைய நிர்வாகம் கலெக்டரிடம் புகார் தெரிவித்தது.இதையடுத்து, கலெக்டர் சமீரன், விமான நிலைய அதிகாரிகளுடன், குப்பை கிடங்கு பகுதியை ஆய்வு செய்தார்.குப்பை கிடங்கின் அருகில் உள்ள நீர் வழிப்பாதையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் கழுகுகள் உள்ளிட்ட பறவைகள் வருவதாக அப்பகுதியினர் கூறினர்.'இறைச்சிக் கழிவு கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பையை தரம் பிரிக்க கூடுதல் கொட்டகை அமைக்கவும், சுற்றுச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க' ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X