பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக தொழில் தொடங்க, விரிவுபடுத்த கடன்: புத்தாக்க திட்ட கூட்டத்தில் தகவல்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம--பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்படி, அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கான வட்டார முதலீட்டு திட்ட விளக்க கூட்டம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, எஸ்.எஸ்.குளம் வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா தலைமை வகித்தார்.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் வாயிலாக, 2,246 பயனாளிகளுக்கு, பழைய தொழிலை மேம்படுத்த,

பெ.நா.பாளையம--பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்படி, அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கான வட்டார முதலீட்டு திட்ட விளக்க கூட்டம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, எஸ்.எஸ்.குளம் வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா தலைமை வகித்தார்.தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் வாயிலாக, 2,246 பயனாளிகளுக்கு, பழைய தொழிலை மேம்படுத்த, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தால், 62 லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.தற்போது, மக்கள் பங்களிப்புடன் கூடிய வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வட்டார அளவில், புதிதாக, 122 பேருக்கு, புதிய தொழில் முனைவோரை உருவாக்கவும், பழைய தொழிலை மேம்படுத்தவும் கடன் வழங்கப்படும். மேலும், 7 தொழில் குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, ஏழு உற்பத்தியாளர் குழு அமைத்து, உற்பத்தியாளர் நிறுவனம் தோற்றுவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இக்குழுக்கள், நிறுவனத்திற்கு, பிற அரசு துறைகளில் இருந்து, 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.இவற்றில், 65 சதவீத பயனாளிகள், பெண்கள். இதில், 100 சதவீதம் மகளிர் குழுக்களில் உள்ளவர்களைக் கொண்டு உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.கூட்டத்தில், வேளாண் துறை, தோட்டக்கலை துறை, கால்நடைத்துறை, வங்கியாளர்கள் மற்றும் மாவட்ட தொழில் மையம் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X