சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரிகளில் செங்கல் கடத்தல் நான்கு பேர் மீது வழக்கு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்-சின்னதடாகம் வட்டாரத்தில், லாரிகளில் செங்கல் கடத்தியதாக, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சின்னதடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், செங்கல் உற்பத்திக்காக அளவுக்கு அதிகமான மண் எடுத்ததால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, செங்கல் உற்பத்தி செய்யவும், லாரிகளில்

பெ.நா.பாளையம்-சின்னதடாகம் வட்டாரத்தில், லாரிகளில் செங்கல் கடத்தியதாக, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சின்னதடாகம் பள்ளத்தாக்கு பகுதியில், செங்கல் உற்பத்திக்காக அளவுக்கு அதிகமான மண் எடுத்ததால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, செங்கல் உற்பத்தி செய்யவும், லாரிகளில் கொண்டு செல்லவும், தடையாணை பெற்றனர்.'தினமலர்' நாளிதழில் வெளியான, தொடர் கட்டுரைகளின் அடிப்படையில், செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறது.இந்நிலையில், நேற்று தடாகம் சிறப்பு எஸ்.ஐ., சுரேந்திரன் மற்றும் போலீசார் கணுவாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, இரண்டு லாரிகளில் செங்கல் லோடு வந்தது தெரியவந்தது.லாரிகளைக் கைப்பற்றிய போலீசார், லாரி டிரைவர்கள் சுந்தரபாண்டி, 30, ரங்கராஜ், 45, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், லாரி உரிமையாளர்கள் சத்தியமூர்த்தி, கனகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X