பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அரசு பள்ளிகளை முன்னேற்ற எளிய வழி!

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கா.இளஞ்செழியன், குன்னுார், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அதிரடியாக உயர்வு பெற எளிதான வழி இருக்கையில், திட்டம் பல தீட்டுவது ஏன் என தெரியவில்லை! மக்கள் பிரதிநிதி மற்றும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் கண்டிப்பாக அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என
Govt School, Govt Employee, Schools


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


கா.இளஞ்செழியன், குன்னுார், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அதிரடியாக உயர்வு பெற எளிதான வழி இருக்கையில், திட்டம் பல தீட்டுவது ஏன் என தெரியவில்லை! மக்கள் பிரதிநிதி மற்றும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் கண்டிப்பாக அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என உத்தரவிட்டாலே, அத்தனை பிரச்னையும் முடிவுக்கு வந்துவிடும் என்பது கண்கூடு.

முக்கியமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அப்போது தான், அவர்கள் தரமாக கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபடுவர். அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதால் பல்வேறு நன்மைகள் விளையும். பள்ளியின் சுகாதாரம் முதல், அனைத்து குறைகளும் உடனுக்குடன் சரி செய்யப்படும்.


latest tamil newsஏனோ, இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்வதில்லை. அரசு சம்பளம் மட்டும் வேண்டும்; அரசு பள்ளி வேண்டாமா? தனியார் பள்ளியில் தான் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது என்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை, ஏன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியமாக அள்ளிக் கொடுக்க வேண்டும்? தமிழை வளர்ப்பதாக கூறும் இந்த ஆட்சியிலாவது, அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படுமா?

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஆக-202123:30:27 IST Report Abuse
Pugazh V அதாவது இந்த இமெயில் எழுதியவர் மற்றும் பிற பணக்கார பசங்க தனியார் பள்ளிகளில் படித்து முன்னேற வேண்டும். பாவம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் வசதிகள் குறைந்த அரசு பள்ளிகளில் படித்து பத்தாங்கிளாஸ் அல்லது ப்ளஸ் டூ வோட படிப்பை நிறுத்தி விடணும். இவங்க பிள்ளைகள் பெரிய படிப்புகளுக்கு போட்டியின்றி ஸீட் வாங்கி படிக்கணுமா?? என்னா வில்லத்தனம்? தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் ஊரைக் கொள்ளையடித்து தானே உங்கள் முதவாளி பிஸினஸ் நடத்தி உங்களுக்கு சம்பளம் தருகிறார்??. எல்லா தனியார் கம்பெனி ஊழியர்களின் சம்பளத்தில் 15% அரசு பள்ளிகளின் மேம்பாட்டு க்காக அரசுக்கு கட்டுகிறீர்களா? அரசுப் பள்ளிகள் மேம்படும்.
Rate this:
Cancel
19-ஆக-202122:18:46 IST Report Abuse
கார்த்திக் சரியான ?
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
19-ஆக-202120:28:10 IST Report Abuse
Sivagiri ஒரு சிற்பி குருவானால் தனது சீடரை தன்னைப் போலவே ஒரு சிற்பியாக ஆக்குகிறார் - - ஒரு லாரி ட்ரைவர் குருவானால் தனது சீடரை தன்னைப் போலவே ஒரு லாரி டிரைவராக ஆக்குகிறார் - - ஒரு நீச்சல் வீரர் குருவானால் தனது சீடரை தன்னை போலவே ஒரு நீச்சல் வீரராக ஆக்குகிறார் - - அதே புத்தகத்தை பார்த்து வாசித்துக் காண்பித்து சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் தன்னை போலவே புத்தகத்தை வாசிக்க மட்டுமே தெரிந்த ஒரு சீடரை உருவாக்க முடிகிறது அதாவது நீச்சல் அடிப்பது எப்படி என்று பல வருஷங்களாக புத்தகத்தை பார்த்து வகுப்பறையில் பாடம் எடுக்கும் ஆசிரியர் - தண்ணீரில் குதித்ததே கிடையாது . . . ஆங்கிலேயன் இந்தியர்களுக்காக - அதிலும் ஸ்பெஷலாக தமிழ் பகுத்தறிவிலிகளுக்காக - விட்டு சென்ற இன்றைய கல்வி முறை இதுதான் - இவர்களால் வெட்டிப் பேச்சு மட்டுமே பேசிக் கொண்டிருக்க முடிகிறது . . . இது இருக்கும் வரை தமிழ்நாட்டில் ஐந்து சதவீதம் மாணவர்கள் மட்டுமே கல்வியின் பலனை அவர்களின் சொந்த முயற்சியில் அடைகிறார்கள் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X