பொது செய்தி

தமிழ்நாடு

சிறு தானிய சாகுபடி பரப்பு அதிகரிக்க இலக்கு: ரூ.35.8 லட்சம் மானியம் ஒதுக்கீடு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி-கோவை மாவட்டத்தில், சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க, மானியத் தொகையாக மொத்தம், 35.8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.உணவு தானியங்களில், சோளம், கேழ்வரகு, பனிவரகு, கம்பு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு ஆகியவற்றில், பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, மானாவாரியிலும், குறைந்தளவு பாசனத்திலும், வறட்சியை தாங்கி

பொள்ளாச்சி-கோவை மாவட்டத்தில், சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க, மானியத் தொகையாக மொத்தம், 35.8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

உணவு தானியங்களில், சோளம், கேழ்வரகு, பனிவரகு, கம்பு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு ஆகியவற்றில், பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, மானாவாரியிலும், குறைந்தளவு பாசனத்திலும், வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.குறுகிய காலத்தில் வளரும் சிறுதானிய பயிர்கள், கால்நடை தீவனமாகவும் பயனளிக்கின்றன. சிறுதானியங்களின் சிறப்பை கொண்டாடும் வகையில் வரும், 2023ம் ஆண்டு, உலக சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, கோவை மாவட்டத்தில் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறை திட்டமிட்டுள்ளது. கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி கூறியதாவது:சத்துமிக்க சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 35.8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சோளம், 150 ெஹக்டேர்; கம்பு, 10 ெஹக்டேர் செயல் விளக்க திடல் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கு, விதை நேர்த்தி செய்ய தேவையான உயிர் உரங்கள், வறட்சியை தாங்க உதவும் பூசா ைஹட்ரா ஜெல், நுண்ணுாட்ட கலவை ஆகியவை அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும். சிறுதானிய சாகுபடிக்கு தேவையான உயிர் உரங்கள், 470 ெஹக்டேருக்கு; நுண்ணுாட்ட கலவை - 680; பயிர் பாதுகாப்பு மருந்து - 430; களைக்கொல்லி மருந்து - 380 ெஹக்டேருக்கு, 50 சதவீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.கைத்தெளிப்பானுக்கு அனைத்து விவசாயிகளுக்கும், 40 சதவீத மானியம் அல்லது, 600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு, ஆதிதிராவிடர், பெண் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியம் அல்லது, 750 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இவை தவிர, சிறு தானிய சாகுபடி குறித்த பயிற்சிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மானிய திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்யலாம். அல்லது தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையத்தை நேரடியாக அணுகி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X