பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : ஆக 19, 2021
Share
Advertisement
நீர் நிரப்பாமல் வீணாகிறதுதமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், கடந்த, 2018 - 19ம் ஆண்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கால்நடைகளின் தாகத்தை போக்கும் வகையில், ஊராட்சிக்கு ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியங்களில், 73 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில ஊராட்சிகளை தவிர, பெரும்பாலான

நீர் நிரப்பாமல் வீணாகிறதுதமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், கடந்த, 2018 - 19ம் ஆண்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கால்நடைகளின் தாகத்தை போக்கும் வகையில், ஊராட்சிக்கு ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியங்களில், 73 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில ஊராட்சிகளை தவிர, பெரும்பாலான தொட்டிகள், குழாய் இணைப்பு இல்லாமல், வீணாகி வருகிறது. சில கிராமங்களில், மேல்நிலை தொட்டி மற்றும் பொது குழாய்கள் அருகில் தொட்டி இருந்தும், இணைப்பு வழங்காமல், சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் பொறுப்பை தட்டி கழித்து வருகின்றன.கால்நடை மருந்தகம் அருகில் இருந்தும், தொட்டியில் தண்ணீர் இல்லாததால், கால்நடைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வீட்டுத் தோட்டத்தில் பூச்சியா?பொள்ளாச்சியில், வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள தோட்ட காய்கறி பயிர் மற்றும் பூச்செடிகளில், பருவமாற்றம் ஏற்படும் காலநிலையில், பூச்சி தாக்கம் ஏற்படுகிறது. இதைக்கட்டுப்படுத்த, மிளகாய் துாள் கரைசல் பயன்படுத்தலாம் என தோட்டக்கலை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இதற்கு, இரண்டு டீ ஸ்பூன் சிவப்பு மிளகாய் துாள் மற்றும், 6 - -7 சொட்டு திரவ சோப்பு ஆகியவற்றை லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு இரவு ஊற வைக்க வேண்டும். மறு நாள் காலை, கரைசலை, 'ஸ்பிரே' பாட்டிலில் நிரப்பி, பாதிக்கப்பட்ட செடிகள் மேல் தெளித்தால், பூச்சி தாக்குதல் கட்டுப்படும், என, தெரிவித்துள்ளனர்.கிளை கால்வாயில் நீர் திறப்புபி.ஏ.பி., பாசன திட்டத்தில், நான்காம் மண்டல பாசனத்துக்காக, கடந்த வாரத்தில், திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து, மெட்டுவாவி வழியாக, வடசித்துார் கிளைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.பொதுப்பணித்துறைஅதிகாரிகள், பாசன சபை தலைவர்கள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் பங்கேற்றனர்.வடசித்துார் கிளைக்கால்வாயில் திறக்கப்பட்ட நீரால், மன்றாம்பாளையம், ஆண்டிபாளையம், வடசித்துார் மற்றும் சேரிபாளையம் பகுதியில், 5,059 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தண்ணீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, விவசாயிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.இந்நிலையில், கிழக்குப்பகுதி குட்டைகளில் தண்ணீர் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தையும், பாசன கிணறுகளின் நீர் மட்டத்தையும் உயர்த்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.கர்ப்பிணிகளுக்கு அன்னதானம்அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் உடுமலை கிளை சார்பில், பெதப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மதிய உணவு வழங்கப்பட்டது.இச்சங்கம் சார்பில், தன்னார்வலர்கள் பங்களிப்புடன், பல்வேறு இடங்களில், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெதப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிகள் மற்றும் இதர நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதே போல், யு.கே.பி., நகர் பகுதியிலும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.புனேவுக்கு செல்லும் இளநீர்கிணத்துக்கடவு, வடசித்துார் மற்றும் நெகமம் பகுதியில் தேங்காய்க்காகவும், இளநீருக்காகவும் லட்சக்கணக்கில் தென்னைகள் வளர்க்கப்படுகின்றன.இவற்றில், வடசித்துார், காட்டம்பட்டி மற்றும் செஞ்சேரி பகுதி மட்டுமல்லாது, நெகமம் சுற்றுப்பகுதியில், வீரிய ஒட்டு ரக இளநீருக்காக, சில ரக தென்னைகள் வளர்க்கப்படுகின்றன. தினமும் வெட்டப்படும் இளநீர், இரவு, 7:00 மணிக்கு புனேவுக்கு அனுப்பப்படுகிறது.இதுபற்றி, இளநீர் வியாபாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி, நெகமம் மற்றும் வடசித்துார் சுற்றுப்பகுதி தோப்புகளில், இளநீர் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில், ஒரு இளநீர், 27 - 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது,' என்றனர்.காணொளியில் குறைதீர் கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், காணொளி காட்சி வாயிலாக, வரும், 24ம் தேதி, காலை, 10:30க்கு, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கிறது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்களில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று, காணொளி காட்சி வாயிலாக, மாவட்ட கலெக்டரிடம் குறைகளை தெரிவிக்கலாம். விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க வசதியாக, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்ட, வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.நேரடி விற்பனையில் விவசாயிகள் உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, கிளுவங்காட்டூர் உட்பட கிராமங்களில், கீரை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.நிலத்தடி நீர் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளில், குறைந்த பரப்பளவில், மணத்தக்காளி, சிறு கீரை உட்பட கீரை வகைகளை, சாகுபடி செய்கின்றனர்.விளைநிலங்களுக்கு வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு கீரையை விற்பனை செய்து வந்தனர். தற்போது இடைத்தரகர்களை தவிர்த்து, விவசாயிகளே, உடுமலை உழவர் சந்தை மற்றும் நகரப்பகுதியில், கீரைகளை நேரடியாக விற்பனை செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நேரடி விற்பனையால், நிலையான விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X