பொது செய்தி

தமிழ்நாடு

வழியெங்கும் திருட்டு! பி.ஏ.பி., கால்வாய்களில் பாரபட்சமின்றி... செயல்படாமல் முடங்கிய கண்காணிப்பு குழு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
உடுமலை-பி.ஏ.பி., பிரதான மற்றும் கிளைக்கால்வாய்களில், தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளதால், பாசனத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயிகள் பரிதவிக்கும் நிலை மாற, அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, உடனடியாக கண்காணிப்பு குழு ஏற்படுத்த வேண்டும்.பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாய் வாயிலாக, ஆக., 3ல், தண்ணீர் திறக்கப்பட்டது. இதில்,
 வழியெங்கும் திருட்டு! பி.ஏ.பி., கால்வாய்களில் பாரபட்சமின்றி... செயல்படாமல் முடங்கிய கண்காணிப்பு குழு

உடுமலை-பி.ஏ.பி., பிரதான மற்றும் கிளைக்கால்வாய்களில், தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளதால், பாசனத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயிகள் பரிதவிக்கும் நிலை மாற, அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, உடனடியாக கண்காணிப்பு குழு ஏற்படுத்த வேண்டும்.

பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து பிரதான கால்வாய் வாயிலாக, ஆக., 3ல், தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.ஆரம்பமே சிக்கல்மண்டல பாசனம் துவங்கும் போதே, பிரதான, கிளை மற்றும் பகிர்மான கால்வாய்களில், போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை; அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும், நிறுத்தப்பட்டது. சில நாட்களில், பிரதான கால்வாயில், கெடிமேடு பகுதியில், கரை உடைந்ததால், மீண்டும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.இதனால், முதல் சுற்றிலேயே சாகுபடி பணிகளை மேற்கொள்வதில், விவசாயிகளிடையே பல்வேறு குழப்பம் ஏற்பட்டது. பாசனப்பகுதிகளில், மக்காச்சோளம் உட்பட நடவு பணிகளை, முழு வீச்சில், மேற்கொள்ளாமல், தொய்வு நிலவுகிறது.இந்நிலையில், கால்வாய்களில், அதிகரித்துள்ள தண்ணீர் திருட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.இரவெல்லாம் திருட்டு திருமூர்த்தி அணையிலிருந்து துவங்கும் பிரதான கால்வாயில், வழியெங்கும் தண்ணீர் திருட்டு அதிகரித்துள்ளது. கரையை ஒட்டி, அமைந்துள்ள விளைநிலங்களுக்கு, இரவு நேரங்களில், தற்காலிகமாக குழாய் அமைத்து, தண்ணீர் உறிஞ்சுகின்றனர்.கிணறுகளில் நிரப்புவது அல்லது நேரடியாக விளைநிலத்திலேயே திருடப்படும் தண்ணீரை பாய்ச்சுகின்றனர்.பிரதான கால்வாயில், திருடப்படும் தண்ணீரின் அளவு, 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான, பாசன நிலங்கள் பயன்பெறும் கிளை கால்வாயில், செல்லும் தண்ணீரை விட அதிகமாகும். வழியோரம் அதிகரித்துள்ள இத்தகைய அவல நிலையால், கிளை, பகிர்மான கால்வாய்களில், போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.இரண்டு ஆண்டுக்கு, ஒரு முறை பாசனத்துக்கு கிடைக்கும் தண்ணீரை, ஏக்கருக்கு, 2 மணி நேரம் என பிரித்து பயன்படுத்தி கொள்ளும், நிலைக்கு பி.ஏ.பி., விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'நான்காம் மண்டல பாசனம் துவங்கியதிலிருந்து, மழை பெய்யவில்லை. இதனால், மக்காச்சோளம் உட்பட நடவுப்பணிகளுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், கால்வாயில் வினியோகம் குறைந்துள்ளது. பொதுப்பணித்துறையினர் முழுமையாக கவனம் செலுத்தி, தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும்,' என்றனர்.குழு என்னாச்சு!பாசன நீர் திருட்டை தடுக்க, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீசை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு முன்பு செயல்பாட்டில் இருந்தது. இக்குழுவினர், பிரதான மற்றும் இதர கால்வாய்களில், இரவு ரோந்து சென்று, பாசன திருட்டுக்கான குழாய்களை பறிமுதல் செய்தும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவும் செய்து வந்தனர்.

தற்போது, சில இடங்களில், பொதுப்பணித்துறையினரால், தண்ணீர் திருட்டுக்கான குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்ட போதும், கண்காணிப்பு குழு இல்லாதது தொய்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே, திருப்பூர், கோவை மாவட்ட கலெக்டர்கள், உடனடியாக கண்காணிப்பு குழு அமைத்து, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசன ஆதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X