பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியின மாணவர்கள் வீடு தேடி பாடம் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர்கள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
வால்பாறை-வால்பாறையில், பழங்குடியின மாணவர்களின் வீடு தேடி சென்று, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறை நகரில், பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியில் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இப்பள்ளியில், உடுமன்பாறை, சங்கரன்குடி, கல்லார்குடி, பரமன்கடவு, கீழ்பூனாஞ்சி,
 பழங்குடியின மாணவர்கள் வீடு தேடி பாடம் கற்பிக்கும் பள்ளி ஆசிரியர்கள்

வால்பாறை-வால்பாறையில், பழங்குடியின மாணவர்களின் வீடு தேடி சென்று, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறை நகரில், பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியில் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இப்பள்ளியில், உடுமன்பாறை, சங்கரன்குடி, கல்லார்குடி, பரமன்கடவு, கீழ்பூனாஞ்சி, வெள்ளிமுடி, கருமுட்டி உள்ளிட்ட, 13 செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த, 99 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால், மாணவர்கள் பள்ளி சென்று படிக்க முடியாத நிலையில், பள்ளி ஆசிரியர்கள் செட்டில்மென்ட் பகுதிக்கு நேரில் சென்று, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர்.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கி படிக்கும் மாணவர்களின், செட்டில்மென்ட் பகுதிக்கே நேரில் சென்று, பாடம் நடத்துகிறோம். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் அனைத்து செட்டில்மென்ட் பகுதிக்கும் செல்கிறோம்.மாணவர்களும், மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர். மேலும், செட்டில்மென்ட் பகுதிக்கு செல்லும் ஆசிரியர்களை, பழங்குடின மக்கள் பாதுப்புடன் அழைத்து சென்று, திரும்ப வந்து வழியனுப்புவது, உதவியாக உள்ளது.இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X