பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் துாய்மை பணி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
உடுமலை-உடுமலை நகரில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, எந்த நேரத்திலும் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கலாம். மாணவர் வருகையை உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில்,
 அரசு பள்ளிகளில் துாய்மை பணி

உடுமலை-உடுமலை நகரில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, எந்த நேரத்திலும் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கலாம். மாணவர் வருகையை உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், சுத்தப்படுத்தும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது.அவ்வகையில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் பள்ளியில், தலைமையாசிரியர் விஜயா, உதவி தலைமையாசிரியர் சிவகுமார் ஆகியோரின் கண்காணிப்பில் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது.குறிப்பாக, வகுப்பறையில் கிருமி நாசினி தெளித்தல், கழிவறைகளை சுத்தம் செய்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு ஏற்பாடு செய்தல், சானிடைசர் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை போதுமான அளவில் இருப்பு வைத்தல் போன்ற, முன்னேற்பாடு பணிகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X