பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள்; விழிப்புணர்வு கருத்தரங்கு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
வால்பாறை-கருவரை முதல், கல்லரை வரை பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் தெரிவித்தனர்.பெண் குழந்தைகள் கல்வி மற்றும் வளரிளம் பெண்களின் கண்ணியமான பணி சூழல் குறித்து, ஆனைமலை ஒன்றிய அளவிலான கலந்தாய்வு நிகழ்ச்சி, வால்பாறையில் நடந்தது. வால்பாறை கேர்.டி., அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய சமூக

வால்பாறை-கருவரை முதல், கல்லரை வரை பெண்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் தெரிவித்தனர்.பெண் குழந்தைகள் கல்வி மற்றும் வளரிளம் பெண்களின் கண்ணியமான பணி சூழல் குறித்து, ஆனைமலை ஒன்றிய அளவிலான கலந்தாய்வு நிகழ்ச்சி, வால்பாறையில் நடந்தது. வால்பாறை கேர்.டி., அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய சமூக பயிற்சியாளர் குளோரா சிந்து வரவேற்றார்.திருப்பூர் மக்கள் அமைப்பின் திட்ட பயிற்சியாளர் மெல்வின் பேசும்போது, ''தமிழகம் முழுவதிலும் உள்ள, 3,800 பஞ்சாலைகளில், நான்கு லட்சம் பெண்கள் பணியாற்றுகின்றனர். பெண் குழந்தைகள் கட்டாயம் படிக்க வேண்டும். சிறு வயதில் பணிக்கு செல்வதையும், திருமணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் பேசும்போது, ''பெண்களை பாதுகாக்க அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெண் குழந்தைகள் கருவறை சட்டம், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் போக்சோ சட்டம், குழந்தை திருமண சட்டம், பெண் பாதுகாப்பு சட்டம், வரதட்சணை கொடுமை சட்டம் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டுள்ளன.எனவே, பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தயக்கமின்றி போலீசில் தெரிவிக்கலாம்,'' என்றார். நிகழ்ச்சியில், நகராட்சி சுமுதாய ஒருங்கிணைப்பாளர் வாசுகி, வக்கீல் முருகன், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X