பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரைக்கு ஊக்கத்தொகை அறிவிக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி-கரும்பு மற்றும் நெல் சாகுபடிக்கு வழங்குவது போல, கொப்பரை உற்பத்திக்கும் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென்னை உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசை வலியுறுத்தியது.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரப்பு

பொள்ளாச்சி-கரும்பு மற்றும் நெல் சாகுபடிக்கு வழங்குவது போல, கொப்பரை உற்பத்திக்கும் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென்னை உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசை வலியுறுத்தியது.தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரப்பு அதிகமுள்ளது. தவிர, தேங்காயில் இருந்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து, ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இருப்பினும், தேங்காய், கொப்பரை விலை சரிவால், தென்னை சாகுபடியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், தமிழக வேளாண் பட்ஜெட்டில், பொள்ளாச்சி பகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது.இது, விவசாயிகள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வேளாண் மானிய கோரிக்கையில், தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்தை, பொள்ளாச்சி பகுதியில் அமைக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.நெல், கரும்பு அறுவடையின்போது, உற்பத்தியாளர்கள் இழப்பை சந்திக்காமல் இருக்க, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல, கொப்பரை உற்பத்தியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலை உறுதி திட்ட பயனாளிகளை, அனைத்து விவசாய பணிகளுக்கும் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.வேளாண் பட்ஜெட் விவாதத்தின்போது, இந்த கோரிக்கைகளையும் விவசாயிகள் நலன் கருதி பரிசீலித்து, அறிவிக்க வேண்டும். இதுகுறித்து, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X