விருதையில் விவசாயிகள் சாலை மறியல்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விவசாயிகளின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதித்தது.விருத்தாசலம், பூதாமூர் ஏனாதிமேடு, பூந்தோட்டம் பகுதிகளில் குறுவை சாகுபடி தீவிரமாக நடக்கிறது. இப்பகுதியில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்தனர்.கடந்த ஒரு மாதமாக நெல் மூட்டைகள் குவிந்து வருகிறது.
 விருதையில் விவசாயிகள் சாலை மறியல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விவசாயிகளின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதித்தது.விருத்தாசலம், பூதாமூர் ஏனாதிமேடு, பூந்தோட்டம் பகுதிகளில் குறுவை சாகுபடி தீவிரமாக நடக்கிறது.

இப்பகுதியில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்தனர்.கடந்த ஒரு மாதமாக நெல் மூட்டைகள் குவிந்து வருகிறது. கொள்முதல் நிலையத்தை திறக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், திடீர் மழைக்கு நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து வீணாகி வருகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

ஆத்திரமடைந்த விவசாயிகள் 25க்கும் மேற்பட்டோர், நேற்று பகல் 11:00 மணியளவில், சப் கலெக்டர் அலுவலகம் முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் ஆதி உள்ளிட்ட போலீசார், அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர், சப் கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால், விருத்தாசலம் - கடலுார் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.விருத்தாசலம் பகுதியில் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில், அவை திறக்கப்படாததால் மழையில் நெல் நனைந்து வீணாகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X