பொது செய்தி

தமிழ்நாடு

சாகச சுற்றுலா திட்டம் துவக்க அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
உடுமலை-உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சாகச சுற்றுலாத்திட்டம் துவக்க, சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தமிழக அரசு சுற்றுலாத்துறை, சுற்றுலாத்தலங்களில், சாகச சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்திமலை சுற்றுலாத்தலம் சாகச சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்

உடுமலை-உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சாகச சுற்றுலாத்திட்டம் துவக்க, சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தமிழக அரசு சுற்றுலாத்துறை, சுற்றுலாத்தலங்களில், சாகச சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்திமலை சுற்றுலாத்தலம் சாகச சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட ஆய்வு, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் தலைமையில், அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.திருமூர்த்தி அணைப்பகுதியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சாகச சுற்றுலா திட்டம் செயல்படுத்தும் வகையில், ஏற்கெனவே தனியார் அமைப்பு வாயிலாக, இங்கு நடந்து வரும் சாகச சுற்றுலா திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதோடு, அதனை அரசே ஏற்று நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X