க்ரைம் செய்திகள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
போக்சோவில் வாலிபர் கைதுபொள்ளாச்சி அருகே, ஆசை வார்த்தை கூறி, 17 வயது சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி, ஆனைமலையை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஸ்குமார்,22. இவருக்கும், பொள்ளாச்சியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே, மகளை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார்

போக்சோவில் வாலிபர் கைது
பொள்ளாச்சி அருகே, ஆசை வார்த்தை கூறி, 17 வயது சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தில் ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி, ஆனைமலையை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஸ்குமார்,22. இவருக்கும், பொள்ளாச்சியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே, மகளை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்; ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.உறவினர் வீட்டில் இருந்த, இருவரையும் போலீசார் பிடித்தனர். ஆசை வார்த்தை கூறி சிறுமியை வெளியூருக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தில் வாலிபரை கைது செய்தனர்.

கஞ்சா விற்றவர் கைது

உடுமலை, எம்.ஏ.எஸ்.எம்., நகர் கருப்பராயன் கோவில் அருகே, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த, தங்கம்மாள் ஓடை பகுதியை சேர்ந்த ராம்குமார், 18, உடுமலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து, 100 கிராம் கஞ்சா மற்றும் விற்பனை பணம், 8,610 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.லாட்டரி விற்றவர்கள் கைதுஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், எஸ்.ஐ.,க்கள் சின்னகாமணண், கார்த்திக்குமார், செல்வராஜ் ஆகியோர், ஆனைமலை, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார் பகுதிகளில் ரோந்து சென்றனர்.அப்போது, சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.போலீசார் கூறுகையில், 'செம்மேடு பகுதியை சேர்ந்த மதிவாணன் என்கிற அமுதவாணன்,57, வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த ராஜ், 57, ஒட்டன்சத்திரம் பாலப்பம்பட்டியை சேர்ந்த சண்முகவடிவேல், 61, ஒடையகுளம் முருகானந்தம்,54, வேட்டைக்காரன்புதுார் சுப்ரமணி,80 ஆகியோர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தனர்.அவர்களை கைது செய்து, 105 லாட்டரி சீட்டுகள்; 3,020 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது,' என்றனர்.

கிணற்றில் இறங்கியவர் மீட்பு

உடுமலை அருகேயுள்ள சின்னப்பன்புதுாரை சேர்ந்த விவசாயி சுப்ரமணியம்,53. நுாறு அடி ஆழம் கொண்ட தனது தோட்டத்து கிணற்றில், மோட்டாரை சரி செய்ய கீழே இறங்கியவர், மேலே வர முடியவில்லை.இது குறித்து, உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக, நிலைய அலுவலர் அரிராமகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி,விவசாயி சுப்ரமணியத்தை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X