நுாறு அடி அகல ஓடை, 10 அடியானது!

Added : ஆக 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: பல்லடத்தின் வடக்கு பகுதியில் ஒன்று சேரும் சிறு ஓடைகள் ஒன்றிணைந்து பெரிய ஓடையாக உருவெடுத்து, கணபதிபாளையம், அல்லாளபுரம் வழியே திருப்பூர் நோக்கி வருகிறது. வீரபாண்டி, கருப்ப கவுண்டம்பாளையம், முத்தையன் கோவில், வெள்ளியங்காடு வழியாக திருப்பூருக்குள் நுழையும் இந்த ஓடை, சங்கிலி பள்ளமாக நகரை கடந்து நொய்யலில் கலக்கிறது.கருப்பகவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள
 நுாறு அடி அகல ஓடை, 10 அடியானது!

திருப்பூர்: பல்லடத்தின் வடக்கு பகுதியில் ஒன்று சேரும் சிறு ஓடைகள் ஒன்றிணைந்து பெரிய ஓடையாக உருவெடுத்து, கணபதிபாளையம், அல்லாளபுரம் வழியே திருப்பூர் நோக்கி வருகிறது.

வீரபாண்டி, கருப்ப கவுண்டம்பாளையம், முத்தையன் கோவில், வெள்ளியங்காடு வழியாக திருப்பூருக்குள் நுழையும் இந்த ஓடை, சங்கிலி பள்ளமாக நகரை கடந்து நொய்யலில் கலக்கிறது.கருப்பகவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள ஓடையின் கரைகளில், கழிவுகள் கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நுாறு அடி அகலத்துக்கு பரந்து பாய்ந்து வரும் இந்த ஓடை சில இடங்களில், 10 அடியாக குறுகியுள்ளது.சுற்று வட்டாரத்தில் வசிப்போர், கட்டட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவது வழக்கமாக உள்ளது. இதனால், ஓடையின் பரப்பு குறையும் நிலையில் மழைக்காலத்தில், நீர் வருவது தடைபடுவதோடு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழும் அபாயமும் உள்ளது. ஓடையில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''ஓடை கரையில் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டுவோர் குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கழிவுகள் கொட்ட வரும் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதமும் விதிக்கப்படுகிறது,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X