பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்க்கடன் சிம்ம சொப்பனம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பயிர்க்கடன் சிம்ம சொப்பனமாகிவிட்டது என்கின்றனர், விவசாயிகள்.விவசாயிகள் கூறியதாவது:கூட்டுறவு வங்கிகளில், பயிர்க் கடன் வழங்க நடப்பு பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர் பற்றிய விவரம் அடங்கலில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால், அடங்கலில் கடந்த காலத்தில் சாகுபடி செய்த பயிர் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கும்.வி.ஏ.ஓ., ஒருவரால் அனைத்து இடங்களுக்கும்

பயிர்க்கடன் சிம்ம சொப்பனமாகிவிட்டது என்கின்றனர், விவசாயிகள்.விவசாயிகள் கூறியதாவது:கூட்டுறவு வங்கிகளில், பயிர்க் கடன் வழங்க நடப்பு பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர் பற்றிய விவரம் அடங்கலில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால், அடங்கலில் கடந்த காலத்தில் சாகுபடி செய்த பயிர் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கும்.வி.ஏ.ஓ., ஒருவரால் அனைத்து இடங்களுக்கும் சென்று நடப்பு பருவ பயிரை பதிவு செய்வது கடினம். பயிர் கடன் வாங்க சுற்றியிருக்கும் நான்கைந்து வங்கியில் தடையில்லா சான்று வாங்க வேண்டும். தலைமை கூட்டுறவு வங்கியில் கணக்கு துவங்க வேண்டும்.சிட்டா அடங்கல், வி.ஏ.ஓ., சான்று வாங்க வேண்டும். ஜாமீன்தாரர் தயார் செய்ய வேண்டும். அவர் எந்த கடனும் நிலுவையில் வைத்திருக்கக்கூடாது. சிறு, குறு விவசாயி சான்று வாங்க வேண்டும். அது ஆறு மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.இவற்றை முடித்து பயிர் கடன் வாங்குவதற்குள் பயிர் அறுவடையே முடிந்து விடுகிறது. நடப்பு பருவத்தில் உள்ள பயிரை அடங்கலில் சேர்க்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருப்பது கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X