பொது செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர் நியமன விவகாரம் கோவில் பூஜாரிகள் எதிர்ப்பு

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருப்பூர்-'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்' என்று கோவில் பூஜாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்பூர் வடக்கு மாவட்ட கோவில் பூஜாரிகள் சங்க தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் அலுவலத்தில் அளித்த மனு:கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கோவில்கள் மூடப்பட்டு, அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் வருமானம் இழந்துள்ளனர்.அரசு
 அர்ச்சகர் நியமன விவகாரம் கோவில் பூஜாரிகள் எதிர்ப்பு

திருப்பூர்-'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்' என்று கோவில் பூஜாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட கோவில் பூஜாரிகள் சங்க தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் அலுவலத்தில் அளித்த மனு:கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கோவில்கள் மூடப்பட்டு, அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் வருமானம் இழந்துள்ளனர்.அரசு அறிவித்த கோவில் பூஜாரிகளுக்கான நிவாரணம் மற்றும் உதவி தொகை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

தனியார் கோவில், ஊர்க் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பூஜாரிகளுக்கு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. இட ஒதுக்கீட்டிலும் நாங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளோம். வருமானம் உள்ள கோவில்களை அரசு கையகப்படுத்தி விட்டது. அறநிலைய துறை கோவில் போல் எங்களுக்கும் உரிய சலுகை வழங்க வேண்டும்.அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும். கோவில், பூஜை என்றால் பின்பற்ற வேண்டிய விதிமுறை ஏராளம் உள்ளன. யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆக முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-ஆக-202105:00:25 IST Report Abuse
meenakshisundaram பலவேறு சமூக நீதி திட்டங்களை வகுக்க வேண்டும் அப்போதான் தமிழகம் ஸ்டாலின் சொன்னது போல 'முதன்மை 'மாநிலம் ஆகும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
19-ஆக-202119:31:36 IST Report Abuse
RajanRajan சேகர் பாபு தெளிவாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட அர்ச்சகர்கள் 58 வயதை தாண்டியவர்கள் என்று கூறிவிட்டார். அப்படியென்றால் பல சந்தேகங்கள். 1 அர்ச்சகர்களுக்கு சட்டப்படி ஓய்வு வயதை கருத்தில் கொண்டே அனுப்பப்பட்டார்கள் என்று இருக்கட்டும். அவர்களுக்கு லேபர் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்பட்டதா? 2 ஞாயிற்றுக்கிழமையன்று வேலை பார்த்துள்ளார்கள். அதற்கு OT வழங்கப்பட்டதா? 3 குறைந்த பட்சம் 21 நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தால் ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்தாலும் PF ESI பிடித்தம் செய்திருக்கவேண்டும். அப்படி செய்யப்பட்டதா? அரசாங்கத்தை பொறுத்தவரை கோவில் ஒரு நிறுவனம். சொத்துகள், வரிகள், மின் கட்டணம், சம்பளம் எல்லாம் பிடிக்கப்படுகின்றன. மின்சாரம் கூட கமர்ஷியல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதனால் இது நிறுவனமே. நிறுவனத்துக்கு உள்ள சட்ட விதிகளின்படி அவர்களுக்கு மேற்ச்சொன்ன விஷயங்கள் செய்யப்பட்டனவா? 4 கோவில் அரசுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் அரசாங்க ஊழியரான அர்ச்சகருக்கு பென்சன் வழங்கப்படுமா? வழங்கப்படுகிறதா? 5 கோவில் அரசுக்கு சொந்தமென்றால் வேலை செய்துகொண்டிருக்கும்போது அர்ச்சகர் இறந்துவிட்டால் அவரது மகனுக்கோ, மகளுக்கோ அரசாங்க வேலை தரப்பட்டிருக்கவேண்டும். குறைந்தது அதே கோவிலில் பணி புரியவாவது வாய்ப்பு தந்திருக்கவேண்டும். அது நடந்ததா? ஆதாரங்கள் எங்கே? 6 பணியில் இருக்கும் ஒரு அர்ச்சகர் இறந்தால் அவரது மனைவிக்கு பென்சன் தரப்படுகிறதா? 7 இது எல்லாவற்றையும் உடனடியாக அவர்களுக்கு 12% வட்டி போட்டு தந்துவிட்டு பின்னர் அரசாங்கம் இதர ஆணிகளை பிடுங்கலாம். 8.அர்ச்சகர்களுக்கு அரசு சலுகை கிடைக்காது, ஆனால் ஓய்வு பெறும் வயது குறித்து அமைச்சர் பேசுகிறார். ஏற்றுக்கொள்ளப்பட்டால், PPF, EPF, GRATUITY, LTA, மருத்துவ அனுமதி, தரப்படுத்தப்பட்ட எண் ஆகியவை குறிப்பிடப்படவில்லை. நாட்களின் லீவ், லீவ் சேலரி, எல்டிஏ, டிஏ & டி மற்றும் இதர அனைத்து அரசாங்கங்களின் வெளிப்பாடு. பரிந்துரைக்கப்பட்ட மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள்? 9. அரசாங்க விதிமுறைகளின் கீழ் "ஓய்வூதிய வயது" குறித்து அமைச்சர் வலியுறுத்தினார் மிகவும் வேடிக்கையான மற்றும் தந்திரமானது பாகுத்தரிவாய நமஹ ஊழலைய சுவாஹா ரவுடிஸ்மாய நமஹ கட்டுமாராயா ஸ்வாஹா தைர்வாதாயா ஸ்வாஹா அறநிலைதுறை ..... அசுர சக்தி ..... ஆடும் வரை ஆடட்டும். நன்றி
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
19-ஆக-202115:27:56 IST Report Abuse
s t rajan நீதிமன்றம் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X